இதுவரை ரூ 6,000 கோடி நன்கொடையாக அளித்த பிரபலம்... அவரது தற்போதைய சொத்து மதிப்பு
உலகில் பல கோடீஸ்வரர்கள் பல்வேறு காரணங்களுக்காக மில்லியன் கணக்கான டொலர்களை நன்கொடையாக வழங்குகிறார்கள்.
முதல் 10 பணக்காரர்களில்
மிகப்பெரிய தொகையை நன்கொடையாக அளித்தாலும், அவர்கள் பில்லியன் டொலர் கிளப்பில் தொடர்ந்து நீடிக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் தொழில்நுட்ப கோடீஸ்வரரான செர்ஜி பிரின்.
இவர் பல்வேறு நலத்திட்டங்களுக்காக சுமார் 700 மில்லியன் டொலர் மதிப்பிலான ஆல்பாபெட் நிறுவனத்தின் பங்குகளை நன்கொடையாக அளித்துள்ளார். ஆனால் பயனடைந்தவர்கள் யார் யார் என்பதை இதுவரை இவர் வெளிப்படுத்தியதில்லை.
கூகிள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான செர்ஜி பிரின் உலகின் பணக்காரர்களில் ஒருவர். ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், அவர் உலகின் முதல் 10 பணக்காரர்களில் ஒருவர்.
மே 22ம் திகதி வெளியான தரவுகளின் அடிப்படையில், அவரது சொத்து மதிப்பு 134 பில்லியன் அமெரிக்க டொலர். உலகின் 8வது பணக்காரர் இவர். தற்போது 51 வயதாகும் பிரின் கடந்த 2023ல் 600 மில்லியன் டொலர் மதிப்பிலான பங்குகளை நன்கொடையாக அளித்துள்ளார்.
யூத எதிர்ப்பு காரணமாக
அதன் பின்னர் 2024 நவம்பரில் 100 மில்லியன் டொலர் மதிப்பிலான பங்குகளை நன்கொடையாக வழங்கியுள்ளார். கடந்த 2019 டிசம்பர் மாதம் கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைவர் பதவியில் இருந்து பிரின் விலகினார்.
இருப்பினும், அவர் ஒரு நிர்வாக உறுப்பினராகவும், நிறுவனத்தைக் கட்டுப்படுத்தும் பங்குதாரராகவும் இருக்கிறார். தனது குடும்பத்திற்கு எதிரான யூத எதிர்ப்பு காரணமாக, பிரின் 6 வயதாக இருந்தபோது ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்.
1998 ஆம் ஆண்டு ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கும் போது சந்தித்த லாரி பேஜுடன் இணைந்து கூகிளை நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |