டிரம்ப்பின் அறிவிப்பால் ஒரே நாளில் 17 லட்சம் கோடிகளை இழந்த பணக்காரர்கள்
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் உலக நாடுகளின் மீது பரஸ்பர வரிவிதிப்பு முறையை அமல்படுத்தியுள்ளார்.
டிரம்ப்பின் வரி விதிப்பு
வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் உலக நாடுகளுக்கு விதிக்கப்படும் வரி பட்டியலை அவர் வெளியிட்டார்.
அதன்படி அனைத்து நாடுகளுக்கும் 10 சதவீதம் அடிப்படை வரியாகவும், மற்ற நாடுகளுக்கு பரஸ்பர வரியையும் அமல்படுத்தினார்.
இதன்படி, இந்தியாவிற்கு 26% இறக்குமதி வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். இந்த வரிவிதிப்பால் உலக நாடுகள் பலவும் கலக்கத்தில் உள்ளன.
உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகள் டிரம்ப் அறிவிப்பால் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
ஒரே நாளில் 208 பில்லியன் டொலர் சரிவு
இதனால் ஒட்டுமொத்த பில்லியனர்களின் சொத்துமதிப்பில் ஒரே நாளில் 208 பில்லியன் டாலர் சரிவு ஏற்பட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
COVID-19 தொற்று காலகட்டத்துக்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு இது என கூறப்படுகிறது.
இதில் அதிகபட்சமாக மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் 17.9 பில்லியன் டொலர்களை(இந்திய மதிப்பில் 1.5 லட்சம் கோடி ரூபாய் இழந்துள்ளார்.
அடுத்தபடியாக, அமேசான் நிறுவனர் ஜெப் பெஜோஸ்,15.9 பில்லியன் டொலர்களையும், எலான் மஸ்க் 11 பில்லியன் டொலர்களையும் இழந்துள்ளனர்.
ஆனால், அமெரிக்கப் பொருளாதாரம் முன்பை விட வலுவானதாகவும், பெரியதாகவும், சிறந்ததாகவும், மீள்தன்மையுடனும் உருவாகும். சந்தைகள் ஏற்றம் பெறும் என டிரம்ப்அமெரிக்கர்களுக்கு உறுதியளித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |