யூரோ கால்பந்து தொடர்! பிரபல ஸ்காட்லாந்து வீரருக்கு கொரோனா உறுதி.. வெளியான முக்கிய அறிக்கை
யூரோ கால்பந்து தொடரில் விளையாடி வந்த ஸ்காட்லாந்து வீரர் Billy Gilmourக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் குரேஷியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என தெரியவந்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி முடித்த அடுத்த சில நாட்களில் தற்போது Billy Gilmourக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையில், ஸ்காட்லாந்து தேசிய கால்பந்து அணி வீரர் Billy Gilmour கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பரிசோதனைக்கு பின்னர் அவர் தற்போது 10 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்வார். எனவே நாளைய யூரோ 2020 தொடரின் குரேஷியாவுக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் Darlingtonல் உள்ள ஒரு ஹொட்டலில் தான் Billy Gilmour தனிமைப்படுத்தி கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்கு பின்னரே Billy Gilmourக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் அது இங்கிலாந்தை எவ்வாறு பாதிக்கும் என்பது இன்னும் தெரியவில்லை.
ஸ்காட்லாந்து வீரர்களுக்கு தொடர்ந்து கொரோனா பரிசோதனை நடந்து வந்து நிலையில் அது தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022