சமையல்காரராக இருந்தவர் இப்போது உலக பணக்காரராக ஆன அதிசயம்!
முன்னாள் McDonald சமையல்காரர் இப்போது உலகின் 11வது மிகப்பெரிய பணக்காரராக மாறியுள்ளார்.
Binance எனும் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சாங்பெங் ஜாவோ (Changpeng Zhao) இப்போது, பில்லியனர்களான Elon Musk, Jeff Bezos, Bill Gates மற்றும் Mark Zuckerberg வரிசையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் 11-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஜாவோவின் நிகர மதிப்பு திங்களன்று Bloomberg-ல் 96 பில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டது.
கிரிப்டோ வட்டாரங்களில் "CZ" என்று அழைக்கப்படும் சாங்பெங் ஜாவோ, இப்போது இந்திய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைமை நிர்வாக அதிகாரியான 12வது இடத்தில் உள்ள முகேஷ் அம்பானி மற்றும் 10-வைத்து இடத்தில்107 பில்லியன் டொலர் மதிப்பிலான Oracle இணை நிறுவனர் லாரி எலிசன் (Larry Ellison) ஆகியோருக்கு இடையே 11வது இடத்தில் உள்ளார்.
Photo: AKIO KON/BLOOMBERG/GETTY IMAGES
ஜாவோவின் தனிப்பட்ட கிரிப்டோ சொத்துக்கள் 96 பில்லியன் எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை, எனவே இது கணிசமாகக் குறைத்து மதிப்பிடப்படலாம்.
CoinGecko-ன் கூற்றுப்படி, Binance என்பது உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிமாற்றமாகும், ஜனவரி 6-ஆம் தேதியின்படி 24 மணிநேர வர்த்தக அளவு 106 பில்லியன் டொலர் ஆகும். ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, இது கடந்த ஆண்டு விற்பனையில் குறைந்தது 20 பில்லியன் டொலர்களை ஈட்டியது.
ப்ளூம்பெர்க் Binance-ன் வருவாயை ஸ்பாட் மற்றும் டெரிவேடிவ் வர்த்தக அளவுகள் மற்றும் குறிப்பிடப்பட்ட கட்டணங்கள் மூலம் கணித்துள்ளது, ஜாவோ நிறுவனத்தின் 90% உரிமையைக் கொண்டுள்ளார்.
இது பொதுவில் வர்த்தகம் செய்யப்படும் போட்டியாளர்களின் அடிப்படையில் நிறுவனத்திற்கு ஒரு மதிப்பை வழங்கியது.