விதிகளை மீறிய பைனான்ஸ் கிரிப்டோ நிறுவனம்: 4.3 பில்லியன் டொலர் அபராதம்
அமெரிக்காவில் பணமோசடி தடுப்பு விதிகளை மீறிய குற்றச்சாட்டில் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளது.
அபராதமாக 4.3 பில்லியன் டொலர்
குறித்த வழக்கில் பைனான்ஸ் நிறுவனம் மீது குற்றவியல் விசாரணையை முன்னெடுக்காமல் இருக்க, அபராதமாக 4.3 பில்லியன் டொலர் செலுத்தவும் அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
@getty
உலகின் மிகப்பெரிய கிரிப்டோ நிறுவனமான பைனான்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்தும் விலக, அதன் நிறுவனரான Changpeng Zhao ஒப்புக்கொண்டுள்ளார்.
இருப்பினும், தமது நிறுவனத்தின் பெரும்பாலான பங்கை தம்மிடம் வைத்துக்கொள்ளவே திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. மட்டுமின்றி, 50 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கவும் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளதுடன் பைனான்ஸ் உடனான அனைத்து தொடர்புகளிலிருந்தும் Zhao தடைசெய்யப்பட்டுள்ளார்.
மேலும், பைனான்ஸ் நிறுவனம் 15 மாதங்களுக்குள் 1.81 பில்லியன் டொலர் தொகையை செலுத்தும் என்றும் எஞ்சிய 2.51 பில்லியன் டொலர் தொகையை பறிமுதல் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
பணமோசடி எதிர்ப்பு முயற்சிகள்
இதனிடையே, பைனான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான BNB காயின் கடும் சரிவை சந்தித்துள்ளதுடன், 5% வரையில் இழப்பை எதிர்கொண்டுள்ளது. Zhao மற்றும் பிறர் பணமோசடி தடுப்பு திட்டத்தை செயல்படுத்த தவறியதன் மூலம் வங்கி ரகசிய சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டனர்.
மட்டுமின்றி அமெரிக்க பொருளாதார தடைகளை மீறியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. பைனான்ஸ் நிறுவனம் மற்றும் Zhao ஆகியோர் விதிகளை மதிக்காமல் அமெரிக்க சந்தையில் இருந்து திட்டமிட்டு லாபம் ஈட்டியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
2018ல் இருந்தே அமெரிக்காவின் நீதித்துறை கண்காணிப்பில் இருந்து வந்துள்ளது பைனான்ஸ் நிறுவனம். 2017ல் துவங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் பணமோசடி எதிர்ப்பு முயற்சிகள் பற்றிய தரவுகளை சமர்ப்பிக்க 2020 டிசம்பர் மாதம் சட்டத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனையடுத்து பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்வதைக் கண்டறிந்து தடுப்பதற்கான பயனுள்ள பணமோசடி தடுப்பு திட்டத்தை செயல்படுத்த தவறியதாக குற்றம் சாட்டப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |