உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் பைனான்ஸ் கடும் சிக்கலில்: முதலீட்டுக்கு ஆபத்து
உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் என அறியப்படும் பைனான்ஸ் மீது அமெரிக்காவின் Securities and Exchange Commission வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பில்லியன் கணக்கான டொலர்கள்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக செயல்பட்டதாகவும், வாடிக்கையாளர்களின் பில்லியன் கணக்கான டொலர்கள் தொகையை தவறாக பயன்படுத்தியுள்ளதாகவும் கூறி SEC வழக்கு தொடுத்துள்ளது.
@reuters
திங்களன்று கொலம்பியா மாவட்டத்தில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதில் பைனான்ஸ் உரிமையாளர் சாங்பெங் ஜாவோவை பிரதிவாதியாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் தொடர்புடைய எக்ஸ்சேஞ்ச்சில் முதலீடு அல்லது வணிகம் மேற்கொண்ட உலகம் முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்கள் கடும் சரிவை எதிர்கொண்டுள்ளனர்.
பைனான்ஸ் மீது 13 குற்றச்சாட்டுகளை SEC முன்வைத்துள்ளது. அதில், வாடிக்கையாளர்களின் பில்லியன் கணக்கான டொலர் தொகையை தவறாகக் கையாளுதல், அத்துடன் அதன் செயல்பாடுகள் குறித்து கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடம் பொய் கூறியது என பட்டியலிட்டுள்ளனர்.
பைனான்ஸ் காயின் கடும் சரிவு
தமது ஆதாயத்தை மட்டுமே கருத்தில் கொண்டுள்ள பைனான்ஸ் உரிமையாளர் சாங்பெங் ஜாவோ, தமது வாடிக்கையாளர்களின் முதலீடுகளை சிக்கலில் வைத்திருந்தார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஆனால், தமது நிறுவனம் மற்றும் தம்மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறு என ஜாவோ புறந்தள்ளியுள்ளார். மேலும், தற்போதைய சூழலில் பைனான்ஸ் வாடிக்கையாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் எந்த சிக்கலும் இல்லை எனவும் அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் உறுதி அளித்துள்ளார்.
4.
— CZ ? Binance (@cz_binance) June 5, 2023
Our team is all standing by, ensuring systems are stable, including withdrawals, and deposits.
We will issue a response once we see the complaint. Haven't seen it yet. Media gets the info before we do.
?
இதனிடையே 300 டொலருக்கு மேல் வணிகம் செய்யப்பட்டு வந்த பைனான்ஸ் காயின் தற்போது 10 சதவீதத்திற்கு மேல் சரிவடைந்து 274 டொலர் என்ற நிலையில் உள்ளது.
பைனான்ஸ் காயின் மட்டுமின்றி, பிரபலமான பல காயின்களும் தற்போது கடும் சரிவை சந்தித்து வருவதுடன், வாடிக்கையாளர்கள் பலர் பெரும் இழப்பையும் எதிர்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.