வெறும் 74 ரூபாய்க்கு பல ஆயிரம் கோடி நிறுவனத்தை விற்ற தந்தை... அவரது மகனின் தற்போதைய நிலை
ஒரு காலத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தைத் தளமாகக் கொண்டு செயல்பட்ட முக்கிய இந்திய தொழிலதிபர்களில் ஒருவர் டாக்டர் பி.ஆர். ஷெட்டி.
பொருளாதார வாய்ப்புகள்
நிதி முறைகேடுகள் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு அவரது தொழில்கள் அனைத்தும் மொத்தமாக நொறுங்குவதைக் கண்டார்.
[
1975ல் NMC ஹெல்த் என்ற நிறுவனத்தை நிறுவினார், முதலீட்டாளர்களிடமிருந்து கணிசமான கடனை மறைத்ததாக மடி வாட்டர்ஸ் ரிசர்ச் நிறுவனம் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, NMC ஹெல்த் என்ற பல ஆயிரம் கோடி மதிப்பிலான நிறுவனத்தை வெறும் 74 ரூபாய்க்கு விற்க வேண்டியிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டார்.
கர்நாடகாவின் உடுப்பியில் 1942ல் பிறந்த ஷெட்டி, பொருளாதார வாய்ப்புகள் தேடி 1973ல் துபாய் சென்றுள்ளார். ஒரு மருந்து விற்பனையாளராக வாழ்க்கையைத் தொடங்கி படிப்படியாக செல்வாக்கு மிக்க தொடர்புகளை உருவாக்கினார்.
தொழிலதிபராக NMC ஹெல்த் என்ற நிறுவனத்தை நிறுவி புதிய தொடக்கத்தை பதிவு செய்தார். மட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னோடியான தனியார் மருத்துவமனை குழுமமாக மாறியது.
அதில், Neopharma, Finablr, மற்றும் BRS Ventures உள்ளிட்ட நிறுவனங்களும் அடங்கும். ஒருகட்டத்தில் ஷெட்டியின் சொத்து மதிப்பு 3 பில்லியன் டொலர் வரையில் எட்டியது.
தனது வெற்றியின் ஒரு பகுதியாக சொந்தமாக விமானம் ஒன்றை வாங்கினார், சொகுசு வாகனங்களை சொந்தமாக்கினார். புர்ஜ் கலீஃபாவில் பல தளங்கள் உட்பட ஐக்கிய அமீரகத்தில் சொத்துக்களை வாங்கிக் குவித்தார்.
இளங்கலைப் படிப்பு
அவரது மகன் பினய் ரகுராம் ஷெட்டி தங்களின் குடும்ப நிறுவனமான BRS Ventures-ல் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டார். ஷெட்டி குழுமத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளை வகித்தார்.
அத்துடன் அசாம் கம்பெனி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிர்வாகிகள் குழுவில் உறுப்பினராகவும் செயல்பட்டார். பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலைப் படிப்பை முடித்த பினய், தங்களின் குடும்ப வணிகத்தை முன்னெடுத்து நடத்தும் பொருட்டு தயாரானார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |