அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியிலிருந்து இலங்கை நட்சத்திரம் விலகல்! ஏன்?
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது மற்றும் 4வது டி20 போட்டியில் இலங்கை நட்சத்திர வீரர் பினுர பெர்னாண்டோ விளையாடமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.
நேற்று சிட்னியில் நடந்த 2வது டி20 போட்டியில் சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தி வெற்றிப்பெற்றது அவுஸ்திரேலியா.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என அவுஸ்திரேலியா முன்னிலை வகிக்கின்றது.
இரு அணிகளுக்கும் இடையேயா 3வது டி20 போட்டி பிப்ரவரி 15ம் திகதி கான்பெரா மைதானத்தில் நடக்கயிருக்கிறது.
இந்நிலையில், 2 டி20 போடடிக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் இலங்கை வீரர் பினுர பெர்னாண்டோவுக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியானது.
அதனால், அவர் 2வடி டி20 போட்டியில் விளையாடவில்லை.
அவுஸ்திரேலியாவில் தற்போது அமுலில் உள்ள நடைமுறைப்படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தில் இருக்க வேண்டும்.
இதனால்,பினுர பெர்னாண்டோ, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது மற்றும் 4வது டி20 போட்டியில் விளையாடமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனிடையே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட குசால் மெண்டிஸின் தனிமைப்படுத்தல் முடிவடைந்துள்ளது. அவர் நாளை போட்டிக்கான தேர்வில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.