சூப்பர்மேனாக மாறிய இலங்கை வீரர் - பறந்து போய் கேட்ச் பிடித்த வீடியோ இணையத்தில் வைரல்
இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 ஆட்டத்தில் இலங்கை வீரர் ஃபீல்டிங் செய்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 ஆட்டத்தில் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற, நேற்று இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள தரம்சாலா மைதானத்தில் 2வது டி20 போட்டி நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த ஆட்டத்தில் நீண்ட நாட்களுக்குப் பின் களமிறங்கிய இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சன் இலங்கை அணியின் பந்துவீச்சை விளாசி தள்ளினார்.
குறிப்பாக லஹிரு குமாரா வீசிய ஆட்டத்தின் 13வது ஓவரில் 4, 6, 6, 6 என தொடர்ச்சியாக ரன் மழைப்பொழிந்த நிலையில் அந்த ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். வைட் திசையில் வீசப்பட்ட பந்தை சஞ்சு சாம்சன் பவுண்டரிக்கு விரட்ட நினைக்க அது பேட்டில் எட்ஜானது. ஆனால் பந்தின் வேகம் அதிகம் என்பதால் ஃபீல்டர்களின் தலைக்கு மேல் சென்று பவுண்டரிக்கு சென்றுவிடும் என்று இலங்கை வீரர்கள் சோகத்தில் இருந்தனர்.
அப்போது ஸ்லிப்பில் ஃபீல்ட் செய்து கொண்டிருந்த பினுரா ஃபெர்னாண்டோ பாய்ந்து சென்று அந்த கேட்சை பிடித்து இந்திய வீரர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
Binura Fernando takes a stunning catch to dismiss Sanju Samson ?#INDvSL #INDvsSL pic.twitter.com/3kVNxO27zq
— Dhruba Jyot Nath Ⓥ (@Dhrubayogi) February 26, 2022