Biotin Rich Foods: கருமையான கூந்தலுக்கு சாப்பிட வேண்டிய உணவுகள்
Biotin Rich Foods: தலைமுடிக்கு மிக அத்தியாவசியமான பயோட்டின் அல்லது விட்டமின் பி7 நீரில் கரையக்கூடியதாகும்.
முடி வளர்ச்சிக்கு தேவையான கெரட்டின் புரதத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது, பயோட்டின் அளவு போதுமான அளவில் இருக்கும் போதே முடி அடர்த்தியாகவும், எளிதில் உடையாத வண்ணமும் இருக்கும்.
இதற்காக மாத்திரைகள் எடுத்துக்கொள்வதை விட இயற்கையான வீட்டில் இருக்கும் உணவுகளை கொண்டே முடி வளர்ச்சியை ஆரோக்கியப்படுத்தலாம்.
முட்டையின் மஞ்சள் கரு
பயோட்டினுக்கான மிக சிறந்த மூல ஆதாரமாக முட்டையை குறிப்பிடலாம், பெரிய அளவிலான ஒரு முட்டையில் 10 மைக்ரோகிராம் பயோட்டின் உள்ளது. இதுதவிர பாதாம் மற்றும் வால்நட்களில் பயோட்டின் ஜிங்க் அதிகம் இருப்பதால் காலை உணவுடன் சேர்த்து தினமும் எடுத்துக்கொள்வது பலனை கொடுக்கும்.

சால்மன் மீன்கள்
பயோட்டின் மற்றும் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சால்மன் மீன்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். மத்தி மற்றும் கானாங்கெளுத்தி மீன்களிலும் இவை காணப்படுகின்றன. ஒமேகா 3 மற்றும் பயோட்டின் கலவை தலைமுடிக்கு தேவையான ஈரப்பதத்தை கொடுப்பதுடன் முடி வளர்ச்சிக்கு தேவையான புரதத்தை கொடுக்கிறது.

கீரைகள்
பசலைக்கீரையில் பயோட்டின், இரும்புசத்து, விட்டமின் சி மற்றும் போலேட் அதிகம் உள்ளது, குறித்த ஊட்டச்சத்துகள் முடியின் மயிர்கால்களுக்கு தேவையான சத்துக்களை வழங்குகிறது, வாரத்திற்கு மூன்று முறை கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு
நார்ச்சத்து மற்றும் பயோட்டின் நிறைந்துள்ள சர்க்கரைவள்ளிக்கிழங்கு செரிமான மண்டலத்தை வலுப்படுத்துவதால் குடல் ஆரோக்கியம் மேம்படுகிறது, இதனால் முடி வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப்பெற்று ஆரோக்கியமான வலுவான கூந்தலை பெறலாம்.
