அமெரிக்காவில் துப்பாக்கி சீர்திருத்த சட்டம்: ஜனாதிபதி ஜோ பைடன் அதிரடி முடிவு!
அமெரிக்காவில் மூன்று தசாப்தங்களுக்கு பிறகு துப்பாக்கி சீர்திருத்தம் தொடர்பான சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.
அமெரிக்காவின் Uvalde மற்றும் Buffalo பகுதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் உட்பட மொத்தம் 30 பேர் வரை உயிரிழந்ததை தொடர்ந்து, அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாட்டிற்கு எதிரான கருத்துகள் வலுவடைய தொடங்கியது.
ஆனால் சமிபத்தில் அமெரிக்காவின் உச்சநீதிமன்றம் தெரிவித்த தீர்ப்பில், சுய பாதுகாப்பிற்காக அமெரிக்கர்கள் பொது இடங்களுக்கு துப்பாக்கி கொண்டு செல்வது அவர்களது தனிப்பட்ட உரிமை என தெரிவித்தது.
REUTERS
இதற்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாட்டை சீர்திருத்தும் நோக்கில், 30 ஆண்டுகளுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய புதிய துப்பாக்கி சீர்திருத்த சட்டத்தில் சனிக்கிழமையான நேற்று கையெழுத்திட்டுள்ளார்.
அத்துடன் இந்த புதிய சீர்திருத்த சட்டமானது கடவுள் விரும்பினால் நிறைய உயிர்களை காப்பாற்ற போகிறது என வெள்ளை மாளிகையில் கையெழுத்திட்ட போது பைடன் தெரிவித்தார், அப்போது அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடனும் உடன் இருந்தார்.
இந்த புதிய சட்டத்தின் அடிப்படையில், அவர்களது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் ஆபத்து விளைவிக்கும் தனிப்பட்ட நபர்களின் கைகளில் துப்பாக்கி செல்வதை தடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இந்த புதிய சட்டம், assault-style rifles அல்லது high-capacity magazines ஆகிய துப்பாக்கிகளுக்கு தடைவிதிக்கவில்லை, ஆனால் சிறார்களால் செய்யப்பட்ட குறிப்பிடத்தக்க குற்றங்கள் பற்றிய தகவல்களை முதல் முறையாக அணுக அனுமதிப்பதன் மூலம் துப்பாக்கியை வாங்கும் நபரின் பின்னணிச் சோதனைகளில் சில நடவடிக்கைகளை எடுக்கிறது.
இதனைத் தொடர்ந்து g7 மாநாட்டிற்காக புறப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அதற்கு முன்னாதாக அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாட்டிற்கு எதிராக ஒன்றும் செய்ய இயலாது என்ற நிலையில், நாங்கள் இதனை செய்துள்ளோம், துப்பாக்கிகளில் பயன்பாட்டில் சமரசம் நாம் செய்தால், அதனை சார்ந்த முக்கிய பிரச்சனைகளிலும் சமரசம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைன் தலைநகர் கீவ்வை தாக்கிய 14 ரஷ்ய ஏவுகணைகள்: முற்றிலும் சிதைந்த மழலையர் பள்ளி!
நாங்கள் செய்வதற்கு நிறைய இருக்கிறது என்று எனக்குத் தெரியும், நான் ஒருபோதும் அதனை கைவிடப் போவதில்லை. அதனால் இது ஒரு நினைவுச்சின்னமான நாள் எனவும் தெரிவித்துள்ளார்.