வெளிநாட்டில் குடியேற இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிரபல வீரர்!
அமெரிக்காவுக்கு குடிபெயர்வதற்காக இந்திய கிரிக்கெட்டில் இருந்து பிரபல வீரர் பிபுல் சர்மா ஓய்வு பெற்றுள்ளார்.
இவர் ஐபிஎல் அணியிலும் தனது திறமையை ஒரு ஆல்ரவுண்டராக நிரூபித்துள்ளார். அதன்படி 2016ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் கோப்பை வென்ற போது அந்த அணியில் சர்மாவும் ஒரு அங்கமாக இருந்தார்.
இவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார். மொத்தம் 33 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்களை வீழ்த்தியுள்ள சர்மா, 2016 இறுதிப்போட்டியில் நட்சத்திர வீரர் ஏபி டி வில்லியர்ஸ் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.
இவர் பல முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 3000க்கும் அதிகமான ரன்களையும் 126 விக்கெட்களையும் எடுத்துள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்காவுக்கு குடிபெயர்வதற்காக அவர் இந்திய கிரிக்கெட்டில் இருந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.
அங்கு நடைபெறும் லீக் கிரிக்கெட் போட்டிகளில் அவர் விளையாடுவார் என தெரிகிறது.
ஆனால் எந்த லீக் போட்டிகளில் விளையாடுவார் என்ற தகவல் வெளியாகவில்லை.