ஜேர்மனியில் பரவும் பறவைக்காய்ச்சல்: அச்சத்தில் விவசாயிகள்
ஜேர்மனியில் பறவைக்காய்ச்சல் பரவிவரும் நிலையில், லட்சக்கணக்கான பறவைகள் கொல்லப்பட்டுள்ளன.
ஜேர்மனியில் பரவும் பறவைக்காய்ச்சல்
ஜேர்மனியின் பல பகுதிகளில், குறிப்பாக, வட கிழக்குப் பகுதிகளில், பறவைக்காய்ச்சல் பரவிவருகிறது.

அதைத் தொடர்ந்து, கோழிகள், வாத்துகள் மற்றும் வான்கோழிகள் என லட்சக்கணக்கான பறவைகள் கொல்லப்பட்டுள்ளன.
Brandenburg மாகாணத்தில் மட்டுமே 150,000 பறவைகள் கொல்லப்பட்டுவிட்டன.
புலம்பெயரும் காட்டுக் கொக்குகளே இந்த H5N1 avian influenza என்னும் வைரஸ் தொற்று பரவலுக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஆக, இது பறவைகள் புலம்பெயரும் காலகட்டம் என்பதால், நிலைமை மேலும் மோசமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம் என பறவைகளை வளர்க்கும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
அதேநேரத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிவரும் நிலையில், வெளிநாடுகளிலிருந்து இறைச்சி இறக்குமதி செய்யப்படுவதால் இறைச்சிக்கு தட்டுப்பாடு ஏற்படாது என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |