பிரித்தானியாவில் அதிகரிக்கும் பறவைக் காய்ச்சல்: தலைமை மருத்துவர் எச்சரிக்கை!
பிரித்தானியாவில் பறவைக் காய்ச்சல் முன்னெப்போதும் இல்லாத வகையில் பரவி வருவதைப் பற்றி பிரித்தானியாவின் தலைமை கால்நடை மருத்துவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானியாவில் avian influenza எனும் பறவைக் காய்ச்சல் காரணமாக இந்த குளிர்காலத்தில் இதுவரை 500,000 வளர்ப்பு பறவைகள் கொள்ளப்பட்டுள்ளன.
அதன்பிறகு, கோழிப் பண்ணைகள் மற்றும் பறவைகள் சரணாலயங்களில் பறவைக் காய்ச்சல் தொடர்ந்து தாக்கி வருவதால், "என்ன நடக்கிறது என்பதைப் பற்றி மிகவும் கவலைப்படுவதாக" பிரித்தானியாவின் தலைமை கால்நடை மருத்துவர் கிறிஸ்டின் மிடில்மிஸ் (Christine Middlemiss) கூறியுள்ளார்.
பிபிசி ரேடியோ 4-ன் டுடே நிகழ்ச்சியில் பேசிய கிறிஸ்டின் மிடில்மிஸ், நேற்று ஒரே இரவில் மேலும் 2 இடங்களில் நோய்ப்பரவல் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
"பிரித்தானியாவில் இப்போது மொத்தம் 40 இடங்களில் பறவைக் காய்ச்சலின் பாதிப்புகள் பதிவாகியுள்ளன - இது முன்பு பதிவுசெய்யப்பட்ட அளவைவிட இந்த ஆண்டு மிக உயர்ந்த எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது". கடந்த ஆண்டு குளிர்காலத்தில் 26 இடங்களில் மட்டுமே பாதிப்புகள் இருந்தன.
தொடர்ந்து பேசிய அவர், நோய்வாய்ப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒவ்வொரு பறவையும் கொல்லப்படும் என்பதை மிடில்மிஸ் உறுதிப்படுத்தினார்.
அதே சமயம், இறைச்சி, முட்டை போன்ற உணவுப் பொருட்களின் விநியோகம் பெரிதும் பாதிக்கப்படாது என்று மிடில்மிஸ் கூறினார்.
இந்த நோய் ஐரோப்பாவிலிருந்து புலம்பெயர்ந்து வரும் காட்டுப் பறவைகளால் பரவுகிறது, அங்கு அதிக தொற்று அளவுகளும் பதிவு செய்யப்படுகின்றன.
இந்த பறவைக் காய்ச்சல் மனித ஆரோக்கியத்திற்கான ஆபத்து குறைவாக இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்கும் கோவிட் -19 தொற்றுநோய்க்கும் எந்த தொடர்பும் இல்லை, ஆனால் பாதிக்கப்பட்ட பறவைகளை மனிதர்கள் தொடக்கூடாது என கூறியுள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022