இங்கிலாந்தில் பரவிவரும் பறவைக்காய்ச்சல்: கட்டுப்பாடுகள் விதிப்பு
இங்கிலாந்தில் சில இடங்களில் பறவைக்காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதிகாரிகள் அது தொடர்பில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்கள்.
இங்கிலாந்தில் பரவிவரும் பறவைக்காய்ச்சல்
இங்கிலாந்தில், Norfolkஇல் இரண்டு இடங்களிலும், Yorkshire இரண்டு இடங்களிலும் Cornwallஇல் ஒரு இடத்திலும் பறவைக்காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
PA Media
ஆகவே, உணவுக்கான பறவைகள் வளர்ப்போர், தங்கள் பண்ணைகளை பாதுகாத்துக்கொள்ளவும், பாதிக்கப்பட்ட பண்ணைகளிலிருந்து மற்ற பறவைகளுக்கு நோய் பரவாமல் தடுக்கவும் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
அத்துடன், தங்கள் பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக விலங்குகள் மற்றும் பறவைகள் நல ஏஜன்சிக்கு தகவல் அளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
Reuters
என்றாலும், பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவே என்றும், முறையாக வேகவைக்கப்பட்ட இறைச்சி, முட்டை முதலானவற்றை உண்பது பாதுகாப்பானதே என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |