மத்திய கிழக்கு நகரமொன்றுடனான விமான சேவை நிறுத்தம்: பிரித்தானிய விமான நிறுவனம் அறிவிப்பு
மத்திய கிழக்கில் நிலவிவரும் பதற்றமான சூழலைத் தொடர்ந்து, பிரித்தானியாவின் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியுடனான விமான சேவையை நிறுத்தியுள்ளது.
பிரித்தானிய விமான நிறுவனத்தின் சேவை நிறுத்தம்
மத்திய கிழக்கில் நிலவிவரும் பதற்றமான சூழலைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் மத்திய கிழக்கிலுள்ள பல நகரங்களுடனான விமான சேவையை நிறுத்தியுள்ளது.

துபாய், தோஹா, அம்மான், பஹ்ரைன் மற்றும் டெல் அவிவ் நகரங்களுக்கான விமான சேவைகளை நிறுத்துவதாக ஏற்கனவே பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், பிரித்தானியாவுக்கும் அபுதாபிக்கும் இடையிலான விமான சேவையும் நிறுத்தப்படுவதாகவும், இந்த சேவை நிறுத்தம், இந்த ஆண்டு இறுதிவரை நீடிக்கலாம் என பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
வான்வெளிச் சூழல் நிலையற்றதாக காணப்படுவதாலேயே இந்த சேவை நிறுத்தம் என பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
அதாவது, கடந்த சில நாட்களாக, மத்திய கிழக்குக்குச் செல்லும் விமானங்கள் பல, மாற்றுப் பாதைகளில் பயணிக்கும் நிலை ஏற்பட்டது.
அதைவிட, பயணிகளின் பாதுகாப்பு முக்கியம் என்பதாலேயே இந்த விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |