பர்மிங்ஹாம் துப்பாக்கி சூடு: பொலிஸார் வெளியிட்ட பதற வைக்கும் காட்சிகள்!
பர்மிங்ஹாம் நகர மையத்தில் துப்பாக்கி சூடு நடத்திய நபரை கைது செய்த ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் அது தொடர்பான காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.
பொலிஸார் வெளியிட்ட வீடியோ ஆதாரம்
மேற்கு மிட்லேண்ட்ஸ் காவல்துறை, கடந்த ஜூன் மாதம் பர்மிங்ஹாம் நகர மையத்தில் துப்பாக்கி சூடு நடத்திய நபரை கைது செய்த காட்சிகளை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த காட்சிகள், அந்த சம்பவத்தின் தீவிரத்தையும், ஆயுதம் ஏந்திய காவல்துறையினரின் துரித நடவடிக்கையையும் படம் பிடித்துக் காட்டுகிறது.
#GUILTY | A gunman who fired shots in a busy Birmingham street has been jailed for more than 7 years.
— Birmingham Police (@BrumPolice) April 25, 2024
We arrested Deraj Meade days after the incident in John Bright Street saw shots fired on 17 June.
Full story: https://t.co/fNzNtViufU pic.twitter.com/6yBhafWZR4
ஆபத்தான சூழ்நிலை மற்றும் தீர்க்கமான கைது
மக்கள் நடமாட்டம் மிகுந்த ஜான் பிரைட் சாலையில் சனிக்கிழமை இரவு 22 வயதான டெரஜ் மீட்(Deraj Meade,) என்ற நபர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதால் அப்பகுதியில் இருந்த மக்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தலைத் தெறிக்க ஓடினர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆயுதம் ஏந்திய காவல்துறையினர், தாக்குல்தாரியின் காரை துப்பாக்கிகளுடன் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
விதிக்கப்பட்ட தண்டனை
துப்பாக்கி கைவசம் வைத்திருந்தது, பயமுறுத்தும் நோக்கத்துடன் ஆயுதம் வைத்திருந்தது மற்றும் உரிமம் இல்லாமல் வெடிமருந்து வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளை மீட் ஒப்புக்கொண்டார்.
அவருக்கு பர்மிங்கஹாம் கிரவுன் கோர்ட்டில் ஏப்ரல் 25, 2024 அன்று ஏழு வருடங்கள் மற்றும் இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |