100 பந்துகள் போட்டியில் 214 ஓட்டங்கள் விளாசிய அணி: வாணவேடிக்கை காட்டிய இருவர்
The Hundred போட்டியில் பர்மிங்காம் பீனிக்ஸ் அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ட்ரென்ட் ராக்கெட்ஸை வீழ்த்தியது.
பர்மிங்காம் பீனிக்ஸ்
எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடந்த The Hundred போட்டியில் பர்மிங்காம் பீனிக்ஸ் மற்றும் ட்ரென்ட் ராக்கெட்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய பர்மிங்காம் பீனிக்ஸ் அணி ஜோ கிளார்க், வில் ஸ்மீத் மற்றும் ரெஹான் அகமதுவின் ருத்ரதாண்டவத்தில் 214 ஓட்டங்கள் குவித்தது.
ஜோ கிளார்க் 33 பந்துகளில் 68 ஓட்டங்களும், வில் ஸ்மீத் 28 பந்துகளில் 51 ஓட்டங்களும் விளாசினர். பின்னர் ஆடிய ட்ரென்ட் ராக்கெட் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது.
டாம் பான்டன் 67 (32) ஓட்டங்களும், பென் டக்கெட் 49 (25) ஓட்டங்களும், பின் ஆலன் 43 (17) ஓட்டங்களும் விளாசினர்.
ஸ்கொட் கர்ரி மற்றும் உஸ்மான் தாரிக் தலா 2 விக்கெட்டுகளும், பென் ட்வர்ஷுய்ஸ், மிட்செல் ஓவன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |