சுவிஸ் மாகாணமொன்றில் பிறந்தநாள் மெழுகுவர்த்திகளுக்கு தடை
சுவிஸ் மதுபான விடுதியில் தீப்பற்றி 41 பேர் பலியான விடயம், எந்த அளவுக்கு அச்சத்தை உருவாக்கியுள்ளது என்பதை கண்கூடாக காணமுடிகிறது.
அந்த தீவிபத்து உருவாக்கியுள்ள அச்சத்தால் தங்கள் பாதுகாப்பு குறித்து சிந்திக்கத் துவங்கியுள்ள மக்கள், தீயணைப்புக் கருவிகள், தீயை அணைக்க பயன்படும் போர்வைகள் மற்றும் புகையைக் கண்டுபிடிக்க பயன்படும் கருவிகளை வாங்கி வீடுகளில் வைக்கத் துவங்கியுள்ளார்கள்.
இந்நிலையில், பிறந்தநாள் கொண்டாட்டங்களின்போது பயன்படுத்தப்படும் மெழுகுவர்த்திகளுக்கு சுவிஸ் மாகாணமொன்று தடை விதித்துள்ளது.
பிறந்தநாள் மெழுகுவர்த்திகளுக்கு தடை
சுவிஸ் பள்ளிகளில் சிறுபிள்ளைகளின் பிறந்தநாளைக் கொண்டாடும் வழக்கம் உள்ளது.
இந்நிலையில், ஜெனீவா மாகாணத்திலுள்ள ஆரம்பப்பள்ளிகளில், பிள்ளைகளின் பிறந்தநாளைக் கொண்டாடும்போது, கேக்கில் மெழுகுவர்த்திகள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
file image
சமீபத்தில் Crans Montana இரவு விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தைத் தொடர்ந்து, தீவிபத்து அபாயங்களைக் குறைக்கும் வகையிலும், பாதுகாப்பு கருதியும், கேக்கில் மெழுகுவர்த்திகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜெனீவா மாகாண கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.
சில ஆசிரியர்கள் இந்த தடையை வரவேற்றுள்ள நிலையில், சில பெற்றோர்களும் ஆசிரியர்களும், குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் பாரம்பரியத்தைக்கைவிடும் வகையில் இந்த தடை அமைந்துள்ளதாக விமர்சனம் முன்வைத்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |