மது போதையில் இளைஞர்கள் அடித்த கூத்து! நண்பனை நிர்வாணமாக்கி பிறந்தநாள் கொண்டாட்டம்
தஞ்சையில் நண்பனை நிர்வாணமாக்கி நடுரோட்டில் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் உள்ள ஓரு தனியார் விடுதியில் கல்லூரி மாணவர்கள் 10 பேர் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி நண்பனின் பிறந்தநாளை முன்னிட்டு நடுரோட்டில் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடியுள்ளனர்.
அப்பொழுது மாணவர்கள் குடி போதையில் இருந்ததால் நண்பனின் ஆடைகளை வலுக்கட்டாயமாக கழட்டி நிர்வாணபடுத்தி அசிங்கப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்த பொது மக்கள் தட்டி கேட்ட பொழுது அவர்களை இழிவாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை அக்கம் பக்கத்தினர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்பொழுது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.