ஒரு நிமிடத்திற்கு 186 ஆர்டர்.! 2022-ல் இந்தியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட உணவு எது தெரியுமா?
2022-ல் இந்தியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவாக பிரியாணியே உள்ளது என்பதை மீண்டும் Zomato-வின் அறிக்கை உறுதிசெய்துள்ளது.
இந்தியர்களுக்கும் பிரியாணி மீதான அவர்களின் காதலுக்கும் அறிமுகம் தேவையில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும், ஏன் ஒவ்வொரு ஊருக்கும் அதன் சொந்த சிறப்புமிக்க பிரியாணி உள்ளது.
பிரியாணி வகைகள்
லக்னோவி பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, கொல்கத்தா பிரியாணி, சிந்தி பிரியாணி, மெமோனி பிரியாணி, மலபார் பிரியாணி, தலச்சேரி பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி மற்றும் பல வகைகள் உள்ளன.
இந்த பிரியாணியின் ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு சுவையில் இருக்கும். ஆனால்,எந்த பிராணியாக இருந்தாலும் பிரியாணி பிரியாணி தான், என்பது போல் அதன் மீது ஆசைப்படுபவர்கள் இல்லாமல் இல்லை.
முழு நாடும் பிரியாணியை மிகவும் விரும்புகிறது, அது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஒரு நிமிடத்திற்கு 186 பிரியாணி ஆர்டர்
Zomato சமீபத்தில் 2022-ஆம் ஆண்டிற்கான அதன் வருடாந்திர ட்ரெண்ட் அறிக்கையை வெளியிட்டது. அதில் அங்கு ஒவ்வொரு நிமிடத்திற்கும் 186 பிரியாணி ஆர்டர்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாக தரவு கூறுகிறது.
உண்மையில், Swiggy-ன் அறிக்கையும் 2022-ல் ஒரு நிமிடத்திற்கு 137 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டதாகக் கூறுகிறது.
Zomato 2022 ட்ரெண்ட் அறிக்கையின்படி, பீட்சா இரண்டாவது இடத்தைப் பிடித்தது, ஒவ்வொரு நிமிடமும் 139 பீட்சா டெலிவரி செய்யப்படுகிறது.
Zomato அறிக்கை:
இந்தியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு எது? பிரியாணி.
Zomato ஒவ்வொரு நிமிடமும் 186 பிரியாணிகளை வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து பீட்சா - ஒவ்வொரு நிமிடத்திற்கும் 139 பீட்சாக்கள் டெலிவரி செய்யப்பட்டன
2022-ல் அதிக ஆர்டர்களை செய்தவர் யார்? டெல்லியை சேர்ந்த அங்கூர் என்பவர் இந்த ஆண்டு 3,330 ஆர்டர்களை கொடுத்துள்ளார்.