காலையில் வெறும் வயிற்றில் பிரியாணி இலையில் டீ போட்டு குடித்தால் இவ்வளவு நன்மையா?
நம் வீட்டு சமையலறையில் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் தான் பிரியாணி இலை. இதற்கு நல்ல நறுமணம் வீசும் தன்மை உண்டு. இந்த இலையானது சமையலுக்கு வெறும் ருசியை மட்டுமின்றி நமக்கு ஆரோக்கியத்தையும் தான் சேர்த்து கொடுக்கிறது.
பிரியாணி இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ப்ளேவோனாய்டுகள், கனிமச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், காப்பர், மாங்கனீசு, செலினியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவையும் அதிகம் நிறைந்துள்ளது.
இவ்வளவு சத்துக்களை உள்ளடக்கிய இந்த இலையை உணவில் சேர்க்கும் போது பல நன்மைகள் கிடைக்கின்றது.
அதுமட்டுமின்றி இதனை வெறும் வயிற்றில் காலையில் குடிப்பதன் மூலம் உடலுக்கு பல ஆரோக்கிய பலன்களை தருகின்றது.
அந்தவகையில் தற்போது இந்த சூப்பரான டீயை எப்படி செய்யலாம் இதன் மூலம் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- 3 பிரியாணி இலைகள்
- சிறுதளவு பட்டை பொடி
- 2 கப் தண்ணீர்
- லெமன் மற்றும் தேன்
செய்முறை
முதலில் பிரியாணி இலையை நன்றாக கழுவிக் கொள்ளுங்கள். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள்.
அதில் பிரியாணி இலை மற்றும் பட்டை பொடி சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.
பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதை வடிகட்டி கொள்ளுங்கள். அதனுடன் தேன் அல்லது சுவைக்கேற்ப லெமன் சாறு சேர்த்துக் கொள்ளுங்கள்.
இந்த டீயை தினமும் காலையில் குடித்து வர ஆரோக்கியமான நன்மைகளை நிறைய பெற முடியும்.
இதர நன்மைகள்
- பிரியாணி இலை டீயில் விட்டமின் சி இருப்பது நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு சிறந்தது. இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
- பிரியாணி இலை டீ வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், எடை இழப்புக்கு உதவுகிறது
- மலச்சிக்கலை தடுக்கிறது.
- இந்த பிரியாணி இலையின் நறுமணம் சுவாச பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
- கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
- அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
- இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
- மன அழுத்தம் மற்றும் பயம் இவற்றை போக்குகிறது.