பிரியாணி விருந்துக்குப் பின்னர்... ஒரே குடும்பத்தில் நால்வருக்கு எமனான தர்பூசணி
மும்பை மாநகரில் பிரியாணி சாப்பிட்டதன் பின்னர் தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தில் நால்வர் அடுத்த 12 மணி நேரத்தில் மரணமடைந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
12 மணி நேரத்தில்
சனிக்கிழமை இரவு 13 வயதான ஜைனப், தனது அக்கா, பெற்றோர் மற்றும் பிற உறவினர்களுடன் பிரியாணி சாப்பிட்டுள்ளார். அதன் பின்னர் உறவினர்கள் ஐவர் வெளியேறியதன் பின்னர், சில மணி நேரம் கழித்து ஜைனப் உட்பட நால்வர் தர்பூசணி சாப்பிட்டுள்ளனர்.

ஆனால் அடுத்த நாள் பகல், நால்வரும் வயிற்றுப்போக்கால் மருத்துவமனையை நாட, சிகிச்சை பலனின்றி 12 மணி நேரத்தில் ஒருவருக்கு பின் ஒருவராக மரணமடைந்துள்ளனர்.
நான்கு மரணங்களும் உணவு நஞ்சூட்டலால் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சனிக்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில் அப்துல்லா அப்துல் காதர் அவரது மனைவி நஸ்ரின் மற்றும் 13, 16 வயதுடைய இரு மகள்களுடன் ஐந்து உறவினர்களும் சேர்ந்து பிரியாணி விருந்தில் கலந்துகொண்டுள்ளனர்.
அதன் பின்னர் ஒரு குடும்பமும் அவர்கள் குடியிருப்புக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில், நள்ளிரவு 1 மணியளவில் காதர் குடும்பம் தர்பூசணி சாப்பிட்டுள்ளது.
காலை சுமார் 5 மணியளவில், அவர்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போக, வாந்தியும் பேதியும் ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையை நாடியுள்ளனர். ஆனால் அவர்கள் நிலை மேலும் மோசமடைந்துள்ளது.
விபத்து மரணம்
பகல் 10.15 மணியளவில் 13 வயதான ஜைனப் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். அடுத்து நஸ்ரின் மற்றும் மூத்த மகள் 16 வயது ஆயிஷா ஆகியோர் மரணமடைய, சுமார் 10.30 மணியளவில் காதர் மரணமடைந்துள்ளார்.
அக்குடும்பத்தை முதலில் பரிசோதித்த டாக்டர் ஜியாத் குரேஷி, அவர்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்ததாகவும், களைப்படைந்தவர்களாகத் தெரிந்ததாகவும் கூறினார்.

இது ஒரு விபத்து மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், உடற்கூறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மட்டுமின்றி, 12 மணி நேர இடைவெளியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களின் மர்ம மரணங்களுக்குப் பின்னால் உணவு நச்சுத்தன்மையே காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |