இனி இணையம் இல்லாமலே சேட் செய்யலாம் - வந்துவிட்டது பிட்சேட் செயலி
இணையம் இல்லாமலே தகவல் அனுப்பும் புதிய செயலி நடைமுறைக்கு வர உள்ளது.
Bitchat செயலி
வழக்கமாக நாம் சேட் செய்ய பயன்படுத்தும் வாட்சப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை பயன்படுத்த இணைய இணைப்பு கட்டாயம் தேவை.
தற்போது இணைய தொடர்பு இல்லாமலே சேட் செய்யும் புதிய செயலியை ட்விட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜாக் டோர்ஸி உருவாக்கியுள்ளார்.
பிட்சேட்(Bitchat) என பெயரிடப்பட்டுள்ள இந்த செயலி, இணைய இணைப்பு தேவையில்லாமல், ப்ளூடூத் தொழில்நுட்பத்தை சார்ந்து இயங்குகிறது.
பேரிடர் காலங்கள், இணைய முடக்கம், இணைய சேவை இல்லாத தொலைதூர கிராமங்கள் ஆகியவற்றிலும், இந்த செயலியை பயன்படுத்தி தகவல் பரிமாறிக்கொள்ளலாம்.
இணையம் இல்லாமலே சேட்
இந்த செயலியை பயன்படுத்த மொபைல் எண்ணோ, மின்னஞ்சலோ, கணக்கு தொடங்கவோ தேவை இல்லை. சாதனத்திலிருந்து சாதனத்திற்கு இடையிலான தொடர்பை அடிப்படையாகக் கொண்டது.
my weekend project to learn about bluetooth mesh networks, relays and store and forward models, message encryption models, and a few other things.
— jack (@jack) July 6, 2025
bitchat: bluetooth mesh chat...IRC vibes.
TestFlight: https://t.co/P5zRRX0TB3
GitHub: https://t.co/Yphb3Izm0P pic.twitter.com/yxZxiMfMH2
செய்திகள் end-to-end encryption செய்யப்பட்டு, பயனர்களின் சாதனங்களில் மட்டுமே தற்காலிகமாக சேமிக்கப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு செய்திகள் தானாக அழிந்து விடும்.
Bitchat செயலி எந்தவிதமான central servers இல்லாமல், decentralised தளமாகச் செயல்படுவதால், பயனர்களின் தரவு தனியுரிமையை உறுதிப்படுத்துவதோடு, அரசின் கண்காணிப்பு (அ) இணைய முடக்கம் போன்ற அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கிறது.
மேலும், இதில் குழுவை உருவாக்கி, அதற்கு கடவு சொல்(Password) பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் சேட் செய்யலாம்.
இந்த செயலி, விரைவில் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |