புதிய உச்சத்தை தொட்ட Bitcoin மதிப்பு! முதலீடு செய்ய இது சரியான நேரமா?
உலகின் முன்னணி டிஜிட்டல் நாணயமான பிட்காயின்(Bitcoin) மதிப்பு புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
பிட்காயின் மதிப்பு உச்சபட்சமாக உயர்வு
உலகின் முன்னணி டிஜிட்டல் நாணயமான(digital currency) கிரிப்டோகரன்சி(cryptocurrency) பிட்காயின் புதிய சாதனை படைத்துள்ளது.
அதாவது 2021 நவம்பரில் பதிவு செய்யப்பட்ட முந்தைய சாதனை விலை $69,000 (£54,242)-ஐ முறியடித்துள்ளது.
தற்போது ஒரு பிட்காயின் மதிப்பு சுமார் ₹48 லட்சத்தைக் $69,202 (£54,404) செவ்வாய்க்கிழமை மதியம் கடந்துள்ளது.
இது டிஜிட்டல் நாணயத்தின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
அண்மைக் காலங்களில் டிஜிட்டல் நாணயங்கள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுவதும், நிறுவனங்களின் ஆர்வமும் அதிகரித்து வருவதும் இந்த விலை உயர்வுக்கு பங்களித்த காரணிகள் எனக் கருதப்படுகிறது.
உயர்வுக்கான முக்கிய காரணிகள்
- பிட்காயின் உற்பத்தி 50% மாக குறைக்கும் நிகழ்வு(Halving event) ஏப்ரல் 19, 2024 அன்று நடைபெற உள்ள நிலையில், (அதாவது தற்போது ஒவ்வொரு நாளும் 900 பிட்காயின்கள் உற்பத்தி செய்யப்படும் நிலையில் அவை 450ஆக குறைக்கப்படும்) இந்த மதிப்பு உயர்வு ஏற்பட்டுள்ளது.
நீ அம்பானியா அல்லது பிச்சைக்காரனா..!குலுங்கி சிரித்த நீதா-முகேஷ் அம்பானி: ஆனந்த் அம்பானி பகிர்ந்த சுவாரஸ்ய கதை
- நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் அதிகரித்து வரும் ஈடுபாடு பிட்காயினுக்கான தேவையை அதிகரித்து வருகிறது.
- சில முதலீட்டாளர்கள் பணவீக்கம் மற்றும் பொருளாதார ஏற்ற இறக்கங்களுக்கு(uncertainty) எதிராக பாதுகாப்புக்கான சாதனமாக பிட்காயினைக் கருதுகின்றனர்.
எவ்வாறெனினும், நாணய சந்தை மிகவும் மாறக்கூடியது என்பதையும், முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்வது அவசியம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
bitcoin price, bitcoin all-time high, bitcoin value, cryptocurrency price, bitcoin investment, bitcoin news, what caused bitcoin price to rise, bitcoin price prediction, is bitcoin a good investment, how to buy bitcoin, best bitcoin exchange, bitcoin ETF, buy bitcoin now, where to invest in bitcoin, how to trade bitcoin, best app for buying bitcoin, should i buy bitcoin,