கிரிப்டோகரன்சி சந்தையில் ஏற்பட்ட மாற்றம்: பிட்காயின் மதிப்பு $87,000-ஐ கடந்தது
பிட்காயின் விலை மீண்டும் $87,000 டொலரை கடந்து மீண்டும் சந்தைக்குள் புதிய உச்சத்துக்கு வந்துள்ளது.
கிரிப்டோகரன்சி சந்தையில் மாற்றம்
ஞாயிற்றுக்கிழமை கிரிப்டோகரன்சி சந்தையில் பிட்காயின் மிதமான மீட்சியை பதிவு செய்து வந்தது.
இந்த எழுச்சி வாரத்தின் தொடக்க நாட்களில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க இழப்புகளை சரி செய்துள்ளது.

டிஜிட்டல் சொத்தான பிட்காயின் சந்தையில் வலுவான நிலையுடன் காணப்பட்டது, அதாவது பிட்காயின் மதிப்பு $87,000 என்ற முக்கிய குறியீட்டை தாண்டி சாதனை படைத்துள்ளது.
பிற்பகல் 2.32 மணி நிலவரப்படி கிரிப்டோகரன்சி $87,493.843 என்ற மிகப்பெரிய தொகைக்கு வர்த்தம் செய்யப்பட்டது.
இந்த நாளில் மட்டும் கிரிப்டோகரன்சியின் மதிப்பு சுமார் 3.32% அதிகரித்துள்ளது.
இரண்டாவது மிகப்பெரிய கிரிப்டோகரன்சியில் எத்தேரியமும் இந்த சந்தை மாறுபாட்டில் 2.12% உயர்ந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |