இது மட்டும் நடந்தால்., Bitcoin 10,000 டொலராக குறையும்! அதிர்ச்சி தகவல்
சில விடயங்கள் நடந்தால் Bitcoin-ன் விலை 10,000 டொலராக குறையும் என்று ஒரு முன்னணி பண மேலாளர் கணித்துள்ளார்.
சமீப நாட்களாக Bitcoin-ன் மதிப்பு கடுமையாக குறைந்து காணப்படுகிறது.
கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் Bitcoin-ன் மதிப்பு 10,000-க்கும் குறைவாகப் பார்த்திருப்போம், தற்போதைய மதிப்பை விட மிகக் குறைவாக வர்த்தகமாகிக்கொண்டிருந்தது.
ஆனால் அதன் பிறகு, Bitcoin வளர்ச்சி அபரிவிதமாக இருந்தது. கடந்த மாதம் ஒருகட்டத்தில் அதன் விலை 68,000 டொலர் வரை உயர்ந்தது.
இப்போது மீண்டும் ஒரு டம்பை நாம் பார்த்துவருகிறோம். இன்று அதன் மதிப்பு 42,000 டொலர் வரையிலும் குறைந்து, பின்னர் பம்ப் ஆனது.
இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சிறந்த பண மேலாளர், லூயிஸ் நேவல்லியர் (Louis Navellier), ஒரு அதிர்ச்சியூட்டும் விலைக் கணிப்பு செய்தார்.
அவரது கணிப்பு, பல கிரிப்டோ ஆர்வலர்கள் மற்றும் கிரிப்டோ சமூகத்தின் முதுகெலும்புக்கு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அவரைப் பொறுத்தவரை, ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை ஏற்பட்டால், முதன்மை டிஜிட்டல் நாணயமான Bitcoin -ன் மதிப்பு 10,000 டொலர் வரை குறையும்.
நவேலியர் கணிப்பின்படி, ஃபிளாக்ஷிப் கிரிப்டோ-சொத்தான பிட்காயின் பயங்கரமான டபுள்-டாப் பேட்டர்னை (double-top pattern) உருவாக்கினால், 80% கீழ்நோக்கிய போக்கைக் காணலாம்.
அதாவது Bitcoin-ன் விலையை 28,000 டொலருக்கு குறைவாக இறங்கலாம், அது bulls-ன் முடிவைக் குறிக்கும் என்று அவர் கூறுகிறார்.
டபுள்-டாப் பேட்டர்ன் ஒரு M வடிவ பேட்டர்ன் ஆகும். இது ஒரு வருடத்திற்கு முன்பு கடைசியாக தோட்ட குறைந்தபட்ச மதிப்புக்கு மீண்டும் இறங்கி பயணிக்கும் என்று அர்த்தம்.
பிட்காயின் 2018-ல் ஒருமுறை 80%க்கு மேல் செயலிழந்தது.
20,000 டொலரில் இருந்த அதன் மதிப்பு, டிசம்பர் 2018-ல் அதிகபட்சமாக செயலிழந்து, சுமார் 84% மதிப்பிலான திருத்தத்தை அனுபவித்தது.
இதன் காரணமாக, தற்போது மீண்டு அதுபோன்ற ஒரு நிகழ்வு நடப்பது முற்றிலும் புதிய நிகழ்வாக இருக்காது.