Bitcoin ETF-ல் இருந்து ரூ 4,667 கோடியை ஒரே நாளில் வெளியேற்றிய முதலீட்டாளர்கள்
BlackRock நிறுவனத்தின் முதன்மை திட்டங்களில் ஒன்றான Bitcoin ETF-ல் இருந்து சுமார் 523 மில்லியன் டொலர், இந்திய மதிப்பில் ரூ 4,667 கோடி தொகையை முதலீட்டாளர்கள் வெளியேற்றியுள்ளனர்.
முதலீடுகள் வெளியேற்றம்
Bitcoin ETF-ஐ BlackRock நிறுவனம் அறிமுகம் செய்ததில் இருந்து ஒரே நாளில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய திரும்பப் பெறுதல் இதுவென்றே கூறுகின்றனர்.

கிரிப்டோ சந்தைகளுக்கு முன்னோடியான பிட்காயின், இந்த வாரம் 90,000 டொலருக்கும் கீழே சரிந்தது, இது கடந்த ஏழு மாதங்களில் பதிவான மிகக் குறைந்த மதிப்பாகும்.
2024 ஜனவரியில் BlackRock நிறுவனத்தின் Bitcoin ETF அறிமுகமானதில் இருந்தே வலுவான முதலீட்டாளர்களை ஈர்த்து வந்துள்ளது. மட்டுமின்றி கிரிப்டோ ETF வளர்ச்சிக்கு மையப்புள்ளியாகவும் அமைந்தது.
ஆனால் தற்போது இந்த முதலீடுகளின் வெளியேற்றம் பிட்காயினில் விற்பனையின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது. அக்டோபர் மாதம் உச்ச விலையைத் தொட்டதன் பின்னர் பிட்காயின் மதிப்பு இறங்குமுகமாகவே இருந்து வருகிறது.
இதனிடையே, தங்கம் மீள்தன்மையுடன் சிறப்பாக உள்ளது, பிட்காயின் தங்கத்திற்கு மாற்றல்ல என்பதும் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றே பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

அதிகரித்து வரும் எச்சரிக்கை
இருப்பினும், நீண்டகால பங்குதாரர்கள் லாபம் ஈட்டுவதையும், பிட்காயின் கருவூல நிறுவனங்களிடையே அதிகரித்து வரும் எச்சரிக்கையையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த ஆண்டில் பிட்காயின் கருவூல நிறுவனங்கள் கிட்டத்தட்ட 50 பில்லியன் டொலர் மதிப்புள்ள பிட்காயினை வாங்கியுள்ளன. சமீபத்தில், இந்த நிறுவனங்களில் பல நிகர சொத்து மதிப்புக்குக் குறைவான விலையில் வர்த்தகம் செய்யத் தொடங்கியுள்ளன.

Bitcoin ETF-ஐ அறிமுகம் செய்த BlackRock நிறுவனத்தின் IBIT பிரிவிற்கு 73 பில்லியன் டொலருக்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளன, காலாண்டில் 19 சதவீதம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |