பிட்காயின் 90,000 டொலருக்கு கீழ் சரிவு., காரணங்கள் என்ன?
பிட்காயின் 90,000 டொலருக்கு கீழ் சரிவடைந்ததற்கான காரணங்கள் என்னென்ன என்பதை இங் பார்க்கலாம்.
உலகின் முன்னணி கிரிப்டோகரன்சியான பிட்காயின் (Bitcoin), கடந்த மாதம் 126,000 டொலர் என்ற சாதனை உயரத்தை எட்டிய நிலையில், தற்போது 90,000 டொலருக்கு கீழ் சரிந்துள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு, கிரிப்டோகரன்சிகளுக்கு ஆதரவாக அவர் தெரிவித்த கருத்துகள் பிட்காயின் விலையை உயர்த்தியிருந்தன.
ஆனால், சீனாவுடன் வர்த்தகப் போர் மீண்டும் தீவிரமாகும் என்ற அச்சம் முதலீட்டாளர்களை பாதுகாப்பான சொத்துகளுக்கு திரும்பச் செய்தது. இதனால், பிட்காயின் விலை திடீரென சரிந்தது.

மேலும், அமெரிக்காவில் நீண்டகால அரசு முடக்கம் காரணமாக முக்கியமான பொருளாதார தரவுகள் வெளியிடப்படவில்லை. இதனால் பங்குச் சந்தையும், கிரிப்டோகரன்சிகளும் பாதிக்கப்பட்டன.
20 பில்லியன் டொலர் மதிப்பிலான பிட்காயின் வர்த்தகங்கள் liquidate செய்யப்பட்டதாக BTC Market நிறுவனத்தின் பகுப்பாய்வாளர் ரேச்சல் லூக்கஸ் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) வட்டி விகிதத்தை குறைக்கும் வாய்ப்பு குறைந்துள்ளதாக சில அதிகாரிகள் கூறியதால், டொலர் வலுவடைந்தது. இதுவும் பிட்காயின் விலையை மேலும் பாதித்தது.
நிபுணர்கள் கூறுவதாவது, பிட்காயின் மற்றும் பிற கிரிப்டோகரன்சிகளின் அதிகமான volatility (மாறுபாடு) பொதுமக்கள் மற்றும் நிறுவன முதலீட்டாளர்களின் நம்பிக்கையை குறைக்கிறது.
இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியம் MiCA regulation மூலம் கிரிப்டோ சந்தைக்கு சட்டப்பூர்வ அடிப்படை அமைத்துள்ளது. லண்டனும் 2026--ல் தனித்தனி விதிகளை கொண்டு வர உள்ளது.
இதனால், பிட்காயின் விலை மீண்டும் உயர வாய்ப்பு இருந்தாலும், தற்போதைய சரிவு முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Bitcoin price drop 2025, Bitcoin below 90,000 Dollars, Crypto market crash news, US China trade war impact, Federal Reserve interest rates, Donald Trump crypto policy, BTC liquidation 20 billion Dollars, Dogecoin decline with Bitcoin, Global cryptocurrency volatility, Bitcoin investor caution trend