புதிய உச்சத்தை எட்டிய Bitcoin: 1.25 லட்சம் டொலரை கடந்தது
கிரிப்டோகரன்சியான பிட்காயின் (Bitcoin) மதிப்பு இன்று (அக்டோபர் 05) காலை 125,500 டொலரரை கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இந்த உயர்வுக்கு பல காரணங்கள் உள்ளன. முக்கியமாக அமெரிக்க அரசின் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மற்றும் நிதி முதலீட்டாளர்களிடையே அதிகரித்துள்ள ஆர்வம் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அமெரிக்க பங்குச் சந்தைகள் உயர்வும், பிட்காயின் ETF-களில் பெரும் முதலீடுகளும் இந்த வளர்ச்சிக்கு ஆதாரமாக உள்ளன.
இது முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி, கிரிப்டோ சந்தையில் புதிய ஊக்கத்தை உருவாக்கியுள்ளது.
மேலும், அமெரிக்க டொலரின் மதிப்பு பல முக்கிய நாணயங்களுடன் ஒப்பிடும்போது பலவீனமடைந்துள்ளது. இதனால், பிட்காயின் போன்ற மாற்று முதலீடுகள் மீது கவனம் அதிகரித்துள்ளது.
இந்த வளர்ச்சி, கிரிப்டோ சந்தையின் மீதான உலகளாவிய நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Bitcoin hits 125K USD, BTC all-time high, institutional crypto investment, BTC price surge, cryptocurrency news