கிரிப்டோகரன்சி: Bitcoin 75,000 டொலராக உயரும் - சுவிஸ் வங்கி CEO
Bitcoin இந்த ஆண்டு 75,000 டொலராக உயரக்கூடும் என சுவிஸ் வங்கியான செபாவின் தலைமை நிர்வாக அதிகாரி கூறியுள்ளார்.
ஸ்விஸ் வங்கி SEBA-வின் தலைமை நிர்வாக அதிகாரியின் கூற்றுப்படி, உலகின் மிகவும் பிரபலமான கிரிப்டோகரன்சியை அதிக நிறுவன முதலீட்டாளர்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்குவதால், பிட்காயினின் (Bitcoin) விலை இந்த ஆண்டு இருமடங்காக உயர்ந்து 75,000 டொலராக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் கிரிப்டோகரன்சிகளில் கவனம் செலுத்தும் ஒழுங்குபடுத்தப்பட்ட வங்கியாக SEBA Bank இயங்கிவருகிறது.
இன்று, (ஜனவரி 12) சுவிட்சர்லாந்தின் செயின்ட் மோரிட்ஸில் நடந்த கிரிப்டோ ஃபைனான்ஸ் மாநாட்டில் பேசிய SEBA-வின் தலைமை நிர்வாக அதிகாரி கைடோ பியூஹ்லர் (Guido Buehler), Bitcoin-ன் "விலை உயரும் என்று நாங்கள் நம்புகிறோம்.
எங்கள் உள் மதிப்பீட்டு மாதிரிகள் தற்போது 50,000 முதல் 75,000 டொலர்கள் வரை விலையைக் குறிப்பிடுகின்றன" என்றும் "நாங்கள் அந்த நிலையைப் பார்க்கப் போகிறோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று கூறினார்.
கடந்த நவம்பரில் எப்போதும் இல்லாத அளவுக்கு Bitcoin-ன் மதிப்பு 69,000 டொலராக உயர்ந்தது, ஆனால் கடந்த இரண்டு மாதங்களில் அதன் மதிப்பு பெரும் சரிவைக் கண்டது.
கடந்த திங்களன்று அதன் விலை 40,000 டொலருக்கும் கீழே சரிந்தது.
Coin Metrics படி, Bitcoin திங்களன்று 6% சரிந்து 39,771.91 டொலராக குறைந்தது.
இன்று (புதன்கிழமை) காலை 5 மணியளவில் Economic Times-ல் 42,921.55 டொலரில் வர்த்தகம் செய்யப்பட்டது.