2025-ல் Bitcoit விலை ரூ.5.4 கோடி வரை உயர வாய்ப்பு
2025-ல் Bitcoit விலை இலங்கை பணமதிப்பில் ரூ.5.4 கோடி வரை உயர வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கையொன்று கூறுகிறது.
Crypto நாணயமான பிட்காயின் (Bitcoin) விலை 2025-ஆம் ஆண்டில் $185,000-ஐ கடந்துவிடும் என Galaxy Research எதிர்பார்க்கிறது.
பல முக்கிய நாடுகள் மற்றும் முன்னணி நிறுவனங்கள் அதிகமாக வாங்குவத்தால் பிட்காயின் விலை மதிப்பு இந்த அளவிற்கு ஏற்றம் காணும் எனக் கூறப்பட்டுள்ளது.
பிட்காயினின் தற்போதைய விலை மதிப்பு சுமார் 93,000 டொலர் என்பது குறிப்பிடத்தக்கது.
Galaxy Research நிறுவனம் அதன் அறிக்கையில்., Nasdaq-100 பட்டியலில் உள்ள ஐந்து முன்னணி நிறுவனங்கள் மற்றும் ஐந்து நாடுகள், 2025-ஆம் ஆண்டில் பிட்காயினை தங்களின் சொத்துப் பட்டியலில் சேர்க்கும். இதன்மூலம் பிட்காயினின் மதிப்பு மேலும் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் Spot Bitcoin ETFs, அடுத்த ஆண்டு $250 பில்லியன் மதிப்பைத் தாண்டும் எனவும், சில சொத்து மேலாண்மை நிறுவனங்கள் பிட்காயினுக்கு 2% அல்லது அதற்கு மேல் ஒதுக்கக்கூடும் எனவும் Galaxy Research எதிர்பார்க்கிறது.
DeFi துறையில் பிட்காயின் இடம்
பிட்காயின், decentralized finance (DeFi) துறையில் மேம்படுவதை வல்லுநர்கள் எதிர்பார்க்கிறார்கள். தற்போது $11 பில்லியன் ஆக உள்ள DeFi துறையில் பூட்டி வைக்கப்பட்டுள்ள பிட்காயினின் மொத்த மதிப்பு இருமடங்காக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
மேலும், 2025க்குள், முக்கிய பிட்காயின் மைனிங் நிறுவனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை AI மற்றும் Hyperscalers உடன் கூட்டாண்மை அமைக்கவிருக்கின்றன.
🔥 BULLISH: Galaxy Research predicts #Bitcoin is set to surpass $150K in H1 2025, potentially hitting $185K by Q4, driven by institutional, corporate, and nation-state adoption, with its market cap reaching 20% of gold’s. pic.twitter.com/YdFp8FywkP
— Cointelegraph (@Cointelegraph) December 28, 2024
சர்வதேச பங்கு
ஹொங்ஹொங்கும் ஜேர்மனியும் பிட்காயினை இருப்புக்களில் (Reserve) ஒரு பகுதியாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளன. இதற்கு மேலும் பல நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன.
இதனால், பிட்காயின் சந்தையில் பரவலான ஏற்றம் நிகழும் என Galaxy Research நம்புகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Bitcoin Price 2025, Bitcoin Price prediction