புதிய உச்சத்தை தொட்ட பிட்காயின் மதிப்பு: $80,000 எல்லையை கடந்து சாதனை
அமெரிக்காவின் கொள்கை மாற்றத்தால் பிட்காயின் மதிப்பு புதிய மைல்கல்லை தொட்டுள்ளது.
பிட்காயின் சந்தை மதிப்பு உயர்வு
பிட்காயின் மதிப்பு மே மாதத்திற்கு பிறகு முதன்முறையாக $80000 என்ற எல்லையைக் கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
கடந்த வாரத்தில் மட்டும் பிட்காயின் மதிப்பு 23% அதிரடியாக ஏற்றம் கண்டுள்ளது. இதன் மூலம் கிரிப்டோகரன்சி சந்தை மீண்டும் புதிய எழுச்சியை பெற்றுள்ளது.
சந்தையில் ஏற்பட்ட மாற்றம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி பிட்காயின் மதிப்பை 2.15% அதிகரித்துள்ளது. இதனால் இரவு 10.23 மணியளவில் பிட்காயின் மதிப்பானது $80641 என்ற புதிய விலை உச்சத்தை தொட்டுள்ளது.
பிட்காயின் ஏற்றத்தால் ஈத்தேரியம் பங்குகளும் 1.36% உயர்ந்து $2,517க்கு வர்த்தகமானது.

விலை ஏற்றத்திற்கான காரணம்
உலகளாவிய பொருளாதார மாற்றங்களே இந்த திடீர் எழுச்சிக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
குறிப்பாக அமெரிக்க கருவூலம் நீண்ட கால அரசு பத்திரங்களின் கொள்முதலை இரண்டு மடங்காக அதிகரிக்க போவதாக அறிவித்தது. இது முதலீட்டாளர்களுக்கு சந்தையின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொள்கை மாற்றமே நிதித்துறை முதலீட்டு மீதான ஆர்வத்தை தூண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |