காபூலுக்கு அனுப்பப்பட்டுள்ள இரகசிய சுவிஸ் சிறப்புப்படை: இவர்கள் யார் தெரியுமா?
சுவிட்சர்லாந்து, இரகசிய சிறப்புப்படை ஒன்றை காபூலுக்கு அனுப்பியுள்ளது.
விடுபட்ட சுவிஸ் குடிமக்கள் யாராவது ஆப்கானிஸ்தானிலிருந்தால், அவர்களையும், சுவிஸ் உதவிக்குழுவுடன் பணியாற்றிய ஆப்கானிஸ்தான் நாட்டவர்களையும் மீட்பதற்காக இரகசிய சுவிஸ் சிறப்புப்படை ஒன்று காபூல் சென்றடைந்துள்ளது.
AAD 10 என்று அழைக்கப்படும் இந்த இரகசிய படை, வெளிநாடு ஒன்றில் முகாமிட்டுள்ளது. மொத்தம் 90 பேர் அந்த படையில் உள்ளார்கள். இவர்களது முக்கிய பணியே தூதரகங்களை காப்பதுதான். உதாரணமாக லிபியாவில் அதிபர் கடாஃபிக்கு எதிராக கலகம் நடந்தபோது, இந்த படையினர்தான் சுவிஸ் தூதரகத்தை பாதுகாத்தார்கள்.
தற்போது, இந்த படையினரில் 10 பேர், விடுபட்ட சுவிஸ் குடிமக்களையும், சுவிஸ் உதவிக்குழுவுடன் பணியாற்றிய ஆப்கானிஸ்தான் நாட்டவர்களையும் மீட்பதற்காக காபூல் சென்றடைந்துள்ளார்கள் என சுவிஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.