உடலின் சர்க்கரை அளவை குறைக்க இந்த ஒரு டீ போதும்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்
கசப்பான சுவை கொண்ட பாகற்காயில் உடலுக்கு நன்மை தரும் பல மருத்துவ குணங்கள் இதில் நிறைந்திருக்கிறது.
வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீஸ், மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
இத்தனை நன்மைகள் நிறைந்த பாகற்காயை டீ போட்டு குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.
எப்படி தயாரிப்பது?
முதலில் பாகற்காயின் தோலை சீவி, சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கழுவி பின் தண்ணீரில் போட்டு கொதிக்கவிட வேண்டும்.
இதனை மிதமான சூட்டில் 10 நிமிடம் கொதிக்க விடவும், இதனால் பாகற்காயின் எசென்ஸ் முழுவதும் தண்ணீரில் இறங்கியிருக்கும்.
பிறகு அடுப்பை அனைத்து இதனை அப்படியே வைத்து பின் ஒரு டம்ளரில் வடிகட்டவும்.
அடுத்து இனிப்பு சுவையிற்காக இதில் நாட்டு சர்க்கரை அல்லது தேன் சேர்த்து கலந்து பருகலாம்.
கிடைக்கும் நன்மைகள்
- இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக்க உதவுகிறது.
- உடலின் கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- கண்களுக்கு பலன் அளிக்கிறது.
- கல்லீரலை சுத்தப்படுத்த உதவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |