ரஷ்யா இனி எரிவாயு வழங்காது... ஜேர்மன் அமைச்சர் தெரிவித்துள்ள கசப்பான தகவல்
ரஷ்யா எரிவாயு வழங்கலைத் தொடராது என ஜேர்மன் பொருளாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய எரிவாயு நிறுவனமான Gazprom நிறுவனம், இம்மாதத்தின் கடைசி மூன்று நாட்களுக்கு எரிவாயு வழங்கலை நிறுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.
ரஷ்யா மீண்டும் எரிவாயு வழங்கலை தொடராது என்பது கசப்பான உண்மை என ஜேர்மன் பொருளாதாரத்துறை அமைச்சரான Robert Habeck தெரிவித்துள்ளார்.
ரஷ்ய எரிவாயு வழங்கல் ஜாம்பவானான Gazprom நிறுவனம், ஐரோப்பாவுக்கு Nord Stream 1 திட்டம் மூலம், குழாய் வழியாக எரிவாயு வழங்குவதை இம்மாதத்தின் கடைசி மூன்று நாட்களுக்கு நிறுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இப்படி எரிவாயு வழங்கலை நிறுத்துவதாக அறிவித்துள்ள அந்நிறுவனம், மீண்டும் எரிவாயு வழங்கலைத் தொடராது என Robert Habeck தெரிவித்துள்ளார்
ஏற்கனவே ரஷ்யா ஜேர்மனிக்கு வழங்கிவந்த எரிவாயுவின் அளவை 20 சதவிகிதமாக குறைத்துவிட்டது. அதனால் குளிர்காலத்தில் மக்கள் பெரும் அவதியுற நேரிடலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.