நேரலையில் செய்தி வாசித்துக்கொண்டிருந்த பெண்ணுக்கு தாலிபான் தலைவரிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பு: திகிலை ஏற்படுத்திய அந்த தருணம்
பிபிசி தொலைக்காட்சியில் நேரலையில் செய்தி வாசித்துக்கொண்டிருந்த செய்தியாளரான ஒரு பெண்ணுக்கு தாலிபான் தலைவர்களில் ஒருவரிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பு திகிலை ஏற்படுத்தியது.
நேற்று முன்தினம், அவுஸ்திரேலிய செய்தியாளரான Yalda Hakim என்ற பெண் நேரலையில் செய்தி வாசித்துக்கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அழைத்தவர் காபூலைக் கைப்பற்றிய தாலிபான்களின் செய்தித்தொடர்பாளரான Shail Shaheen.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றுவதை உலகமே பார்த்து அதிர்ந்து போயிருக்கும் நேரத்தில், தாலிபான்களின் முக்கிய தலைவர் ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தால் எப்படி இருக்கும்!
ஆனாலும், தனது பதற்றத்தையோ அதிர்ச்சியையோ வெளிக்காட்டிக்கொள்ளாத Yalda, சாதாரணமாக பேசுவதுபோல், ஓகே, தாலிபான்களின் செய்தித்தொடர்பாளர் Shail Shaheen நம்முடன் இணைப்பிலிருக்கிறார். சொல்லுங்கள் Shaheen, நான் பேசுகிறது கேட்கிறதா? என்று கேட்க, மறுபக்கம் Shail Shaheen தொடர்ச்சியாக பேச ஆரம்பித்தார்.
ஆப்கானிஸ்தானின் நிலை குறித்து யாருக்கும் எந்த குழப்பமும் வேண்டாம், காபூலில் இருக்கும் ஆப்கானிஸ்தான் மக்களுடைய சொத்துக்களுக்கும் உயிருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் என்றார் Shail Shaheen.
தொடர்ந்து 30 நிமிடங்கள் அவரிடம் சாமர்த்தியமாக பேட்டியே எடுத்துவிட்டார் Yalda, தன்னுடைய பதற்றத்தை வெளிக்காட்டாமல்.
தாலிபான்களின் செய்தித்தொடர்பாளர் குறிப்பாக Yaldaவை அழைக்க ஒரு காரணம் இருக்கிறது. Yalda ஆப்கானிஸ்தானில் பிறந்தவர். ஒரு குழந்தையாக இருக்கும்போது கடத்தல்காரர்கள் உதவியுடன் அவுஸ்திரேலியாவுக்கு தப்பி வந்தது Yaldaவின் குடும்பம்.
அதற்குப்பின், கல்வி கற்று, ஊடகவியலில் பட்டம் பெற்று 2012இல் பிபிசி தொலைக்கட்சியில் இணைந்தார் Yalda. தாலிபான்களிடமிருந்து வந்த அழைப்பை சாமர்த்தியமாக சமாளித்த Yaldaவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.