பாஜக - அதிமுக உறவு கணவன், மனைவி போன்றது: எச்.ராஜா பேச்சு
பாஜக மற்றும் அதிமுக இடையேயான உறவு கணவன், மனைவி போன்றது என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.
சனாதன தர்மம்
மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா,"இந்து தர்மத்துக்கு தொன்றுதொட்டு வழங்கி வருவது தான் சனாதன தர்மம். இந்த சனாதனம் எப்போதும் நிலையானது. தாய், சகோதரி, மனைவி உறவை போல நிலையானது. இதனை எப்போதும் மாற்ற முடியாது.
சனாதன தர்மத்தை இழிவுபடுத்துபவர்களை வேரோடு அகற்ற வேண்டும். தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் சேர்ந்து அனைத்து காவல் நிலையங்களிலும் புகார் அளிக்க வேண்டும்" என்றார்.
பாஜக - அதிமுக உறவு
மேலும் பேசிய அவர், "ஒரே நாடு, ஒரே தேர்தல் வரப்போகிறது என்பதை பிரதமர் மோடியோ அல்லது வேறு யாருமோ தெரிவிக்கவில்லை.
கணவன், மனைவிக்கு இடையே தினமும் யாரும் ஐ லவ் யூ சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பாஜக மற்றும் அதிமுக இடையேயான உறவு கணவன், மனைவி போன்றது" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |