நடிகர் சத்யராஜ் மகளுக்கு அழைப்பு விடுக்கும் பாஜக.., அவருடைய பின்னணி வாழ்க்கை என்ன?
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜை பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட அழைத்ததாக தகவல் வெளிவந்துள்ளது.
திவ்யா சத்யராஜ்
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஒரு ஊட்டச்சத்து நிபுணர் ஆவார். இவர் நடத்தி வரும் மகிழ்மதி என்ற இயக்கம் மூலம் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார்.
இவர், தமிழ் நாட்டில் இருக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்கி வருகிறார்.
இவருக்கு அரசியலில் இணைந்து மக்களுக்கு சேவை செய்ய விருப்பம் இருப்பதாகவும், ஆனால், கட்சி தொடங்குவதற்கு ஆர்வம் இல்லை எனவும் தெரிகிறது.
பாஜக அழைப்பு
இந்நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட திவ்யா சத்யராஜை பாஜக அழைத்ததாகவும், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் வந்துள்ளன.
இது தொடர்பாக தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த திவ்யா சத்யராஜ், "எனக்கு அரசியலில் ஆர்வம் உண்டு என பல முறை கூறியிருக்கிறேன். ஆனால் அதற்கு, நீங்கள் எம்பி ஆக வேண்டும் என அரசியலுக்கு வருகிறீர்களா, அமைச்சர் பதவிக்கு ஆர்வமா, உங்கள் அப்பா பிரச்சாரம் செய்வாரா என்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எனக்கு தேர்தலில் வந்து போட்டியிடவோ, வெல்லவோ விருப்பம் இல்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஆசை மட்டும் உள்ளது. என்னை பாஜக அழைத்தது உண்மை தான். ஆனால், ஒரு மதத்தை போற்றும் கட்சியுடனும் இணைவதில் எனக்கு விருப்பம் இல்லை.
தேர்தல் முடிந்தவுடன் எந்த கட்சியில் இணைய போகிறேன் என்பதை அறிவிக்கிறேன். நான் அரசியலில் எந்த முடிவு எடுத்தாலும் எனது அப்பா பக்கபலமாக இருப்பார்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |