விஜயின் செயலை வரவேற்ற பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், ஆளுநரை சந்தித்தது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை வரவேற்பு
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று கிண்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். அப்போது அண்ணா பல்கலை கழக மாணவி வன்கொடுமை தொடர்பாக ஆளுநரிடம் மனு அளித்துள்ளார்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது, திமுக நிர்வாகி வன்கொடுமை தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், விசாரணை குறித்து முன்னுக்குப் பின் முரணாக, காவல்துறையும், அமைச்சர்களும் பேசி வருவதால், திமுக அரசின் விசாரணையில் நம்பிக்கையின்மை குறித்தும், பாஜக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
இன்றைய தினம், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், சகோதரர் விஜய், திமுக ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பின்மை குறித்து, ஆளுநரை சந்தித்துப் பேசியிருப்பதை வரவேற்கிறோம்.
வழக்கை திசைதிருப்ப தொடர்ந்து முயற்சித்து வரும் திமுக அரசைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரனாக, அனைத்துக் கட்சியினரும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நம் சகோதரிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |