சிறுவனின் முகத்தில் சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர் கைது!
மத்திய பிரதேசத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த சிறுவன் மீது சிறுநீர் கழித்த பாஜக பிரமுகரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இன்று அதிகாலை போலீசார் கைது செய்தனர்.
மத்தியபிரதேசம் மாநிலத்தின் சித்தி தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ கேதார் நாத் சுக்லாவின் பிரதிநிதி பிரவேஷ் சுக்லா.
இவர் மதுபோதையில் மனநலம் பாதித்த பழங்குடியினத்தை சேர்ந்த சிறுவன் மீது சிறுநீர் கழித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
मेरे संज्ञान में सीधी जिले का एक वायरल वीडियो आया है...
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) July 4, 2023
मैंने प्रशासन को निर्देश दिए हैं कि अपराधी को गिरफ्तार कर कड़ी से कड़ी कार्रवाई कर एनएसए भी लगाया जाए।
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் ஹபீஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து,"பாஜக நலன் குறித்து பொய் பேசும் பாஜக பிரமுகர், பழங்குடியின சிறுவன் மீது இப்படி சிறுநீர் கழிக்கிறார். இது கண்டிக்கத்தக்கது" எனக் கூறினார்.
சிறுவன் மீது சிறுநீர் கழித்த விவகாரம் அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் கவனத்திற்கு சென்ற நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
இந்நிலையில், பாஜக பிரமுகர் பிரவேஷ் சுக்லாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |