விமான நிலையங்களிலும், பாத்ரூம் போகும்போதும் பாஜக தலைவர்கள் பேசமாட்டார்கள்: அண்ணாமலை
வாழ்நாளில் இனிமேல் விமான நிலையங்களில் செய்தியாளர்களை சந்திக்க மாட்டேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்திக்கும் போதும், பொதுமேடைகளில் பேசும்போதும் சர்ச்சையான கருத்துக்களை தெரிவிப்பது வழக்கம்.
அவரின் பேச்சுக்கு ஆளும் கட்சி உள்பட அனைத்து கட்சிகளும் எதிர்கருத்துக்களை பேசுவார்கள். இந்நிலையில், கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை தோல்வியை தழுவினார்.
பின்னர், அவருக்கு மத்திய அமைச்சர் அல்லது இணை அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று பேசிய நிலையில் எந்த பதவியும் வழங்கப்படவில்லை.
செய்தியாளர்களிடம் பேசியது
இந்நிலையில் நேற்று கோவை விமான நிலையத்துக்கு வருகை தந்த அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் பல கேள்விகளை எழுப்பினர்.
இதற்கு பதில் அளிக்காமல் காரில் ஏறிய அண்ணாமலை, "வாழ்நாளில் இனிமேல் விமான நிலையங்களில் செய்தியாளர்களை சந்திக்க மாட்டேன். பாஜக அலுவலகத்தில் மட்டுமே சந்திப்பேன்.
முறைப்படி 24 மணி நேரத்தில் செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். பாஜகவில் யாரும் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்க மாட்டார்கள்.
பாத்ரூம் போகும்போதும், வெளியில் வரும்போதும் இனி பாஜக தலைவர்கள் பேசமாட்டார்கள். செய்தியாளர்கள் சந்திப்பு இனி முறைப்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |