தலித் MLA கோயிலுக்கு வந்ததால் கங்கை நீரை தெளித்து சுத்தம் செய்த பாஜக நிர்வாகி
தலித் எம்எல்ஏ கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டதால் கோயில் வளாகத்தை கங்கை நீரை கொண்டு சுத்தப்படுத்திய பாஜக நிர்வாகி சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளார்.
பாஜக நிர்வாகி சஸ்பெண்ட்
இந்திய மாநிலமான ராஜஸ்தான், ஆல்வார் புறநகர் தொகுதியில் தலித் சமூகத்தை சேர்ந்த டிக்கா ராம் ஜுல்லி காங்கிரஸ் எம்எல்ஏவாக உள்ளார். இவர் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆவார்.
இந்நிலையில் இவர் கடந்த 6-ம் திகதி அன்று ஆல்வார் நகரில் நடைபெற்ற கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டார்.
இவர் வந்ததால் கோயிலின் புனிதம் கெட்டுவிட்டதாக கூறி பாஜகவின் முன்னாள் எம்எல்ஏ கியான்தேவ் அகுஜா என்பவர் கோயில் வளாகத்தை கங்கை நீரை தெளித்து பூஜை செய்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் பாஜக நிர்வாகி கியான்தேவ் அகுஜாவை அக்கட்சி சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும் அவரிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |