ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் வாக்குகள்: இந்தூர் தொகுதியில் பாஜக முன்னிலை
இந்தூர் தொகுதியில் வாக்குப்பதிவு தொடக்கம் முதலே அசுர வேகத்தில் பா.ஜனதா வேட்பாளர் சங்கர் லால் வாணி முன்னிலை பெற்றார்.
பாஜக முன்னிலை
மத்தியப் பிரதேசம், இந்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காண்டிபம் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜக-வில் இணைந்தார்.
காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட 2 மாற்று வேட்பாளர்களின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டதால், அத்தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் வாக்குபதிவின் போது காங்கிரஸ் தொண்டர்களும், மக்களும் நோட்டாவிற்கு வாக்களிக்குமாறு காங்கிரஸ் கோரிக்கை வைத்து பிரசாரம் செய்தது.
இந்தூர் தொகுதியில் வாக்குப்பதிவு தொடக்கம் முதலே பாஜக வேட்பாளர் சங்கர் லால் வாணி ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் வாக்குகளை கடந்து அசுர வேகத்தில் முன்னிலை பெற்றார்.
9.30 மணி நிலவரப்படி சங்கர் லால் வாணி 1 லட்சத்து 9 ஆயிரத்து 56 வாக்குகள் பெற்றார். அப்போது அவர் 93 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றார்.
நோட்டா 16 ஆயிரத்து 480 ஓட்டுகளுடன் 2-வது இடத்தில் இருந்தது.
பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் 3 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று இருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |