பிரபல நடிகரின் காலை உடைத்த பாஜகவினர்: மனைவியே போட்ட மாஸ்டர் பிளான்

Police spokesman Actors
By Ragavan Jun 18, 2023 02:13 PM GMT
Report

பிரபல சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகர் வெங்கடேஷை அவரது மனைவியே திட்டம் தீட்டி பாஜகவினரை ஏவி கால்களை உடைத்த சம்பவம் அம்பலமாகியுள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான 'அசத்தப்போவது யாரு' மற்றும் 'கலக்கப்போவது யாரு' உள்ளிட்ட காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலாமனவர் நடிகர் வெங்கடேஷ்(50). இவர் 'கருப்பசாமி குத்தைகைதாரர்', 'சீடன்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் மதுரை தபால் தந்தி நகர் பகுதியில் வசித்துவருகிறார். மதுரையில் தற்போது விளம்பர ஏஜென்சி நடத்திவரும் வெங்கடேஷ், விளம்பரங்கள் எடுப்பது, நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது போன்ற வேலைகளை செய்து வருகிறார்.

பிரபல நடிகரின் காலை உடைத்த பாஜகவினர்: மனைவியே போட்ட மாஸ்டர் பிளான் | Bjp People Break Actor Venkatesh Leg Arrested

இதனிடையே, கோவையைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார் வெங்கடேஷ். இது அவரது மனைவி தெரியவர அதனை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்குமிடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட, வெங்கடேஷ் பானுமதிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையிலும் இருவரும் ஒரே வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கணவரை தன்னுடன் வீட்டிலேயே வைத்திருக்க முடிவு செய்த பானுமதி தனது வீட்டில் கார் ஓட்டுநராக பணிபுரியும் மோகன் உதவியுடன் வெங்கடேஷ் காலை உடைத்து வீட்டிலேயே கிடைக்கும்படி செய்யவேண்டும் என திட்டம் தீட்டினார்.

பிரபல நடிகரின் காலை உடைத்த பாஜகவினர்: மனைவியே போட்ட மாஸ்டர் பிளான் | Bjp People Break Actor Venkatesh Leg Arrested

இதற்காக மோகன் ராஜ்குமார் என்பவரை பானுமதிக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். வெங்கடேஷின் காலை உடைக்க ராஜ்குமார் ஒரு லட்சம் ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது. அதனால் அந்த திட்டத்தை கைவிட்டு தகுந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார் பானுமதி.

இதனிடையே, சமூக வலைதளங்களில் அடிக்கடி அரசியல் கருத்து பேசிவந்த வெங்கடேஷ், சமீபத்தில் பாஜக கட்சிக்கு எதிராகவும், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோருக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டதாக கூறப்படுகிறது. அதனால் பாஜகவினர் அவரை நேரில் சென்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த பானுமதி, இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள திட்டம் தீட்டினார். கணவர் மீது வெறுப்பில் இருந்த அவர், தன்னைப் போலவே கோபத்தில் இருந்த பாஜக பிரமுகர் வைரமுத்து என்பவரை அணுகினார்.

அனைத்தும் வசதியாக அமைந்ததும், ஜூன் 15 இரவு வெங்கடேஷை திருப்பாலை செல்லும் வழியில் உள்ள நாகனாகுளம் கண்மாய் பகுதிக்கு வரவழைத்து கட்டையால் இரு கால்களையும் அடித்து உடைத்தனர்.

பிரபல நடிகரின் காலை உடைத்த பாஜகவினர்: மனைவியே போட்ட மாஸ்டர் பிளான் | Bjp People Break Actor Venkatesh Leg Arrested

வெங்கடேஷ் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் தல்லாகுளம் காவல்துறைக்கு தகவல் கொடுக்க, பொலிஸார் வெங்கடேஷை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து தல்லாகுளம் காவல்துறையில் வெங்கடேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவுசெய்த பொலிஸார், வெங்கடேஷ் மனைவி பானுமதி(48), ராஜ்குமார்(37), மோகன்(40), வைரமுத்து(38), மலைச்சாமி(35), ஆனந்தராஜ் (37) ஆகிய 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் துளசி என்பவரைத் தேடி வருகின்றனர். 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US