கைகொடுக்காத பாலராமர்.., அயோத்தியில் பாஜக பின்னடைவு
அயோத்தி ராமர் கோயில் அமைந்துள்ள ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
பின்னடைந்த பாஜக
பாஜக, உத்தரப்பிரதேசத்தில் அயோத்தி ராமர் கோயிலை கட்டி ராம பக்தர்கள் வழிபாட்டிற்கு திறந்துவிட்டிருந்ததை பெரிய சாதனையாக கொண்டாடியது.
ராமர் கோயிலை மையாக வைத்து உத்தரப் பிரதேம் மட்டுமின்றி, தேசிய அளவிலும் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி மிகப்பெரும் பிரச்சாரத்தை முன்னெடுத்தது.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் அயோத்தி ராமர் கோயில் அமைந்துள்ள ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அத்தொகுதியில் பிற்பகல் நிலவரப்படி, பாஜக வேட்பாளரான லல்லு சிங்கை விட, சமாஜ்வாதி கட்சியின் அவதேஷ் பிரசாத் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதாக நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் ஆணைய இணையதள தகவல் படி, உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி 36 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பாஜகவின் முக்கிய அரசியல், ஆன்மிக களமான அயோத்தியில் உள்ள ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு அக்கட்சியினருக்கு கவுர பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |