வாக்களித்தவுடன் குஷ்பு போட்ட ட்வீட்டால் பாஜகவுக்கு அதிர்ச்சி! குழப்பத்தை ஏற்படுத்தும் வார்த்தை
மக்களவை தேர்தலில் நடிகை குஷ்பு வாக்களித்த பின்னர் பகிர்ந்த ட்வீட் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் காலை முதலே வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து வருகின்றனர். மேலும் பொதுமக்களும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
அந்தவகையில் நடிகையும், தேசிய மகளிர் நல ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு தனது கணவர் மற்றும் மகள்களுடன் சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார்.
குஷ்பு ட்வீட்
பின்னர், குஷ்பு தான் வாக்களித்த புகைப்படங்களை ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். அப்போது அவர் பதிவிட்டிருந்த ஹேஷ்டேக் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர் தனது பதிவில் #Vote4INDIA மற்றும் #VoteFor400Paar என்று கூறியிருந்தார். இதில் #Vote4INDIA என்ற ஹேஸ்டேக்கை கடந்த சில நாட்களாக இந்தியா கூட்டணியினர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், குஷ்பு ஏன் இந்த ஹேஸ்டேக்கை பயன்படுத்த வேண்டும் என்று பாஜக ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இவர், உடல்நிலையை காரணம் காட்டி பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வராத நிலையில் தற்போது இந்த பதிவு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்தியர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று பதிவிட்டாரா இல்லை வேறு ஏதேனும் காரணமா என்பதை குஷ்பு தான் விளக்க வேண்டும் என்று பேசி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |