தமிழ்நாட்டில் போட்டியிட்டு பின்னடைவு பெற்ற பாஜக நட்சத்திர வேட்பாளர்கள்
உலகிலேயே அதிக மக்கள் தொகையை கொண்ட நாட்டில் ஆறு வாரங்களாக நடத்தப்பட்ட தேர்தலில் இன்று முடிவுகள் வெளியாகின்றன.
குறித்த தேர்தலானது ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது.
தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை வெளியிட்டு வரும் நிலையில், தமிழகத்தில் திமுக முன்னிலையை வகித்துள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே போட்டியானது நிலவி வருகிறது.
இம்முறை தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கோடு பாஜக செயற்பட்டு வந்தது. அதற்காக பாஜகவால் பல நட்சத்திர வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டனர்.
ஆனால் அவர்கள் அனைவரும் கடும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தோல்வியுற்ற நட்சத்திர வேட்பாளர்கள்
சென்னையில் 3 மக்களவை தொகுதிகளிலும் பாஜக நட்சத்திர வேட்பாளர்களை போட்டியிட வைத்தது.
தெலங்கானா ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜனை தென் சென்னையிலும், பால் கனகராஜை வட சென்னையிலும், வினோஜ் பி செல்வத்தை மத்திய சென்னையிலும் பாஜக களம் இறக்கிறது.
நீலகிரியில் எல் முருகன், கோவையில் அண்ணாமலை, நெல்லையில் நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன், தஞ்சையில் கருப்பு முருகானந்தம், சிதம்பரத்தில் கார்த்திகாயினி, மதுரையில் ராமசீனிவாசன், விருதுநகரில் ராதிகா சரத்குமார் என தமிழ்நாட்டில் நட்சத்திர வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டனர்.
அந்தவகையில் தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பாஜக தலைமையில் களம் இறக்கப்பட்ட அனைத்து நட்சத்திரங்களும் கடும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
தென் சென்னையில் திமுக வேட்பாளரகளான தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி போன்றவர்கள் முன்னிலையிலும் கோவையில் கடும் பின்னடைவை அண்ணாமலையும் பெற்றுள்ளார்.
திருநெல்வேலியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வெற்றிபெருவார் என எண்ணிய நிலையில் அவரும் பின்னடைவு சந்தித்துள்ளார்.
திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் முன்னிலையில் இருக்கிறார்.
மேலும் வட இந்தியாவில் பாஜக நட்சத்திர வேட்பாளர்களான ஹேம மாலினி, கங்கனா ரணாவத் ஆகியோர் முன்னிலையில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |