அண்ணாமலைக்கு 'ஆட்டுக்குட்டியை' பரிசாக கொடுத்த பாஜக தொண்டர்! பெயர் சூட்டி மகிழ்வு
தமிழக மாவட்டம், புதுக்கோட்டையில் 'என் மண் என் மக்கள்' நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலைக்கு ஆட்டுக்குட்டியை பாஜக தொண்டர் ஒருவர் பரிசளித்தார்.
புதுக்கோட்டையில் நாடாளுமன்ற தொகுதி
புதுக்கோட்டையில் 'என் மண் என் மக்கள்' நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை பொதுமக்களிடம் பேசிய போது, "புதுக்கோட்டையை மாவட்டமாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்த போது, அரண்மனையை தமிழக அரசுக்கு புதுக்கோட்டை மன்னர் வழங்கினார்.ஆனால், அவருக்கு இன்னும் மணிமண்டபம் அமைக்கவில்லை.
அதுமட்டுமல்லாமல், புதுக்கோட்டை தொகுதியில் ஒரு நாடாளுமன்ற தொகுதி கூட இல்லை. அதற்காக பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளோம்" என்றார்.
ஆட்டுக்குட்டி பரிசு
இதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டையில் அண்ணா சிலை அருகே நடந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பாஜக தொண்டர் ஒருவர் ஆட்டுக்குட்டி ஒன்றை பரிசளித்தார்.
அப்போது அதனை பெற்றுக்கொண்ட அண்ணாமலை ஆட்டுக்குட்டிக்கு 'அபிராமி' என பெயர் சூட்டினார். பின்பு, அபிராமி என்ற பெண்ணிடம் ஆட்டுக்குட்டியை கொடுத்து நன்றாக பார்த்துக் கொள்ளும்படி கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |