மத்திய அமைச்சர் பதவி வேண்டாம்! பாஜகவிற்கு அதிர்ச்சி கொடுத்த கேரள எம்.பி சுரேஷ் கோபி
கேரளாவின் முதல் பாஜக எம்.பி-யாக வெற்றி பெற்று மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற நடிகர் சுரேஷ் கோபி, தனக்கு மத்திய அமைச்சராக பணியாற்ற விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
முதல் பாஜக எம்.பி
இந்திய நாடாளுமன்ற தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு கேரளாவில் முதல் பாஜக எம்.பியாக நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்று இருந்தார்.
இதையடுத்து நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், நடிகர் சுரேஷ் கோபி மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார்.
கேரளாவில் பாஜகவின் சார்பில் வெற்றி அடைந்த பிறகு தனக்கு அமைச்சர் பதவியில் விருப்பம் இல்லை என தெரிவித்து இருந்தார்.
அமைச்சர் பதவியில் விருப்பம் இல்லை
நேற்று மத்திய அமைச்சராக சுரேஷ் கோபி பொறுப்பேற்று கொண்ட நிலையில், தனக்கு மத்திய அமைச்சராக பணியாற்ற விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றில் பேசிய சுரேஷ் கோபி, மத்திய அமைச்சர் பதவி தனக்கு வேண்டாம். சினிமாவில் நடிக்க வேண்டியது இருப்பதால் அமைச்சர் பதவியில் தனக்கு விருப்பம் இல்லை என முன்பே தலைமையிடம் தெரிவித்து இருந்தேன்.
ஆனால் பாஜக தலைமை கேட்டுக் கொண்டதால் மறுப்பு தெரிவிக்கவில்லை. விரைவில் மத்திய அமைச்சர் பொறுப்பில் இருந்து விரைவில் விடுவிப்பார்கள் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் திருச்சூர் தொகுதியில் எம்.பியாக மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |